Breaking News

“எவ்வளவு உழைச்சும் போதாது...”


 “எவ்வளவு உழைச்சும் போதாது...”

“ஒவ்வொரு நாளையும் கழிப்பதே பெரும்பாடாக இருக்கு…”

ஹலாலான முறையில் பணக்காரனாக வாழ்தல் என்பது தனது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து மேலதிகமாக Bank Balance ஐ வைத்திருத்தலாகும்.
“அது எப்படி சாத்தியம்?”
: “அந்த Secret ஐ நான் சொல்றன்.. 🩵
: “இந்த Post காசைப் பற்றி மட்டும் தான்..💚💚


💰 முதலாவது: ரிஸ்க் அளிப்பவன் (வருமானத்தை தருபவன்) அல்லாஹ் என்பதை நம்ப வேண்டும். அவனிடம் முதல் மனிதன் தொடக்கம், கடைசி மனிதன் வரை, அவனை ஏற்றுக் கொண்ட, ஏற்றுக் கொள்ளாத, முஸ்லிம், முஸ்லிமல்லாத, இந்த பூமியில் வாழ வருகின்ற அனைவருக்கும் வழங்குவதற்கு போதுமான ரிஸ்க் உண்டு என்பதையும் நம்ப வேண்டும். நமக்கு என்ற எழுதிய ரிஸ்க் நமக்குத் தான், எந்த அளவுக்கு காசு தருதல் எமக்கு பொருத்தமோ, அந்த அளவுக்கு தருவான் என்பதையும் சேர்த்து நம்ப வேண்டும்.
“உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத உயிரினம் ஒன்றுமே பூமியில் இல்லை.”
(அல்குர்ஆன்: 11:6)


💰 இரண்டாவது: ஹலாலான முறையில் உழைக்க வேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும் ஹராமின் பக்கம் செல்லக் கூடாது. எந்த வழியிலாவது ஹராமான உழைப்பில் உள்ளவர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும்; ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி.


💰 மூன்றாவது: ஹலாலான முறையில் செலவழிக்க வேண்டும்.
1. தனக்கான செலவு
2. தனது குடும்பத்துக்கான செலவு
3. ஸதகா, ஸகாத்
இவை அனைத்தும் அல்லாஹ்வுக்காக நடைபெற வேண்டும். குடும்பத்தலைவனான ஆணுக்குக் அல்லாஹ் வழங்கும் வருமானமானது அவருக்கும், அவரின் மீது தங்கிவாழ்வோருடைய செலவிற்கும் சேர்த்துத் தான்; அது நீதியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பெண்ணின் வருமானம் பெண்ணுக்குரியது.


💰 நான்காவது: ஹராமான செலவுகள் இல்லாமலாக்கப்பட வேண்டும். படம் பார்ப்பதற்கும், பாட்டு கேட்பதற்கும், சிகரட், சாராயம், போதைப் பொருள் பாவிப்பதற்கும் அல்லாஹ் காசு தரமாட்டான்.


💰 ஐந்தாவது: வீண்விரயமான செலவுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆடம்பரமானவைகள், தேவைக்கு மிஞ்சியவைகள், பெருமைக்காக செலவழிக்கப்படுபவைகள் எல்லாம் தேவையில்லாத ஆணி.


💰 ஆறாவது: வட்டி போன்ற ஹராமான வழிகளில் தன் தேவைகளை பூர்த்தி செய்தல் இல்லாமலாக்கப்பட வேண்டும். “என்னோடு போர் செய்ய தயாராகுங்கள்” என்ற கூற்று ஆயுதமேந்திய சண்டையல்ல; பொருளாதார ரீதியான சண்டை. முடியுமானால் பொருளாதாரத்தில் வென்று பாருங்கள் என்பது தான் அது. உள, பண நெருக்கடி இல்லாமல் வாழ வேண்டுமாக இருந்தால் வட்டியிலிருந்து விடுபட வேண்டும்.
“இப்படி நீங்கள் நடக்காவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள்.”
(அல்குர்ஆன்: 2:279)


💰 ஏழாவது: இவை அனைத்தும் சீராக நடக்க வேண்டுமாக இருந்தால் திருமணத்திற்கு தயாராகும் போது
- மனைவி வந்து வாழ்வதற்காக தன் வசதிக்கேற்ற வீடு,
- மனைவிக்கு கொடுப்பதற்காக மஹர்,
- அன்றாட செலவுகளுக்கான வருமானமீட்டக் கூடிய தொழில்,
- மனைவிக்கும், அவள் மூலம் தனக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கும் செலவழிக்க வேண்டும் என்ற மனநிலை
என்பவற்றை தயார் செய்ய வேண்டும். அதிலேயே பாதி பணக்காரனாகி விட முடியும்.


💰 எட்டாவது: இன்னும் Bank Balance கூட வேண்டுமென்றால் ஈமான் கொண்டு, நல்ல செயல்கள் செய்து, பாவங்களை விட்டு, மன்னிப்பும் கேட்க வேண்டும். இது அல்லாஹ்வின் வாக்கு; எம் றப்பு வாக்கு மீறுபவனல்ல.
“ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு.”
(அல்குர்ஆன்: 22:50)


💰 இதில் எந்த இடத்தில் பிழை விட்டிருக்கின்றீர்கள் என்று பார்த்து சீராக்கிக் கொள்ளுமிடத்து ஒரு பணக்காரனாக, தன்னிறைவுள்ளவனாக தானும் வாழ்ந்து தன் குடும்பத்தையும் வாழ வைக்க முடியும்..
- Zulfa Zubair -

No comments