Breaking News

கடிகாரம் ஓடுமுன் ஓடு (சிறுகதை)..


 

  இரு நாட்களின் விடுமுறையின் பின்னர், வாரத்தின் முதலாவது நாளான திங்கட் கிழமை பாடசாலைக்குச் செல்வது அசௌகரியமாக இருந்தாலும், ஏனைய நாட்களைப் போல அதிகாலையில் துயிலெழுந்து சுபஹ் தொழுது

முடிந்ததும் காலைச் சாப்பாட்டையும், மத்தியாணச் சாப்பாட்டையும் அவசர அவசரமாகச் சமைத்து முடித்தாள் சஹ்ரின்.

                          தனது கணவன், பிள்ளைகளுக்கும் காலை 

ஆகாரத்தைக் கொடுத்து விட்டு, தனக்குப் போதுமானளவு

சாப்பாட்டை டிபன் பொக்ஸினுள் போட்டுக் கொண்டவள்,

நேரத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.அது 6.30 

மணியைக் காட்டியது.

                         இன்னும் நேரமிருக்கிறது.

       கணவனுடன் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

                              பாடசாலைக்கு நேரத்திற்குச் சமுகமளிப்ப

வர்களில் சஹ்ரினும் ஒருத்தி. 41 நாட்கள் லீவு இருந்தாலும்,

அவற்றைப் பயன்படுத்த மாட்டாள். பிள்ளைகளுக்குச் சுகவீனமென்றாலும் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டுப் பாடசாலைக்குச் சென்று விடுவாள்.

              ஏன்  டீச்சர்..? ஒங்களுக்கு நோயே வருவதில்லையா..?பொன்னாடை போத்திக் கௌரவிப்பாங்களா..? அல்லது ஒங்களுக்காகச் சிலை

வைப்பாங்களா..? எப்போதும் பாடசாலையே தஞ்சமெனக்

கிடக்கிறீங்க..? ஏனைய ஆசிரியர்களின் கிண்டல் பேச்சுக்கள். 

                 சஹ்ரின் எதனையிம் காதில் போட்டுக் கொள்வதில்லை. தனது கடமையை அல்லாஹ்வுக்காகச்

செய்ய வேண்டுமென்பதே அவளது முழு நோக்கமுமாக இருந்தது.

             அன்றும்...

           அவ்வாறே பாடசாலைக்கு ஆயத்தமானாள்.வீதியில் 

மாணவர்களின் நடமாட்டம் சொற்பமாகவே காணப்பட்டன.

மிகவும் நேரத்துடன் பாடசாலைக்குச் செல்கிறோமோ என

நினைத்தவாறு நடந்து கொண்டிருந்தாள் சஹ்ரின்.

                 டீச்சர்...!

இன்று ஏன் நேரம் பிந்திச் செல்றீங்க என்றான் பஹ்மி.

    என்ன .. நேரம் போய்ட்டுதா..?ஓட்டமும் நடையுமாகப்

பாடசாலையைச் சென்றடைந்தாள் சஹ்ரின்.

                           காலை ஆராதணைக்காக மாணவர்கள்

நின்ற வண்ணமிருந்தனர். தேசியக் கீத்த்தின் இறுதி வரிகளைப் பாடிக் கொண்டிருந்தனர். பிங்கரில் கைவிரலை

அழித்தினாள்.அது 7.36மணியைக் காட்டியது.சஹ்ரினுக்குத்

தூக்கி வாரிப் போட்டது.

             இவ்வளவு நேரம் பிந்தி வந்தேனா..? அவளின் உள்ளத்தில் கேள்விகள்  எழுந்து மறைந்தன.

                  ஆசிரியர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

        ஏன் லேட்..?

நேரத்தைப் பார்த்தேன்.6.30 எக் காட்டியது.ஆறுதலாகச் 

செல்லலாம் என இருந்தேன்.வழியில் ஒருவர் நேரம் பிந்திய

தாகக் கூறியதுமே ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தேன்

என்றாள் சஹ்ரின்.

             இதற்குத் தான் நேரத்தை முந்தி வைக்க வேண்டுமென்றார் சபீனா டீச்சர்,அதனால் வந்த வினை தான்

இது.ஒவ்வொரு வீட்டு அறைக்குள்ளும் 10, 15 நிமிடங்கள் 

முன் கூட்டியே வைத்துள்ளேன். அவ்வாறு செய்வது கூடா

தென்றார் மாஜிதா டீச்சர்.நம்மைப் பாதுகாக்கும் நல் நோக்கத்திற்காக வைப்பதில் தவறில்லை என்றார் சரீனா

டீச்சர்.கடிகாரம் ஓடுமுன் ஓடு எனப் பாடிக் கொண்டு வந்தார்

றிஸ்னாஸ் டீச்சர்.ஒவ்வொருவராய்க் குட்டிப் பிரசங்கமே

நடாத்தி முடித்தனர்.

                    பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்றதும், முன்

விறாந்தையின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் கடிகாரம்

நேரத்தைக் காட்டி வரவேற்கும்.

               அன்றும்..

சஹ்ரினின் கண்கள் கடிகாரத்தை நோக்கின.அது 6.30 ஐக் காட்டிக் கொண்டிருந்தன.அப்போது தான்

புரிந்தது கடிகாரம் நிறுத்தப்பட்டுள்ளதென்று.

                   இச் சம்பவத்தை வீட்டிலுள்ளோரிடம் கூறிச் சிரித்தாள்  சஹ்ரின். உடனடியாக அவள் கணவன் பட்டரியை

வாங்கி வந்து கடிகாரத்தில் போட்டு சுவரில் மாட்டினார்.அது

சரியான நேரத்தைக் காட்டியது.

                       இனி மேல், வழமை போல சஹ்ரின் டீச்சர் பாட

சாலைக்குச் செல்வாள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


ஜெனீரா தௌபீக் ஹைருல் அமான்

                     கிண்ணியா

No comments