சாதனையாளர் நீ!
சாதனை சிற்பிக்குள்
பிறந்த முத்து நீ
தோல்வியை கண்டு அஞ்சாத
நெஞ்சம் கொண்டவள் நீ
கடலலை போல தொடர்
முயற்சியை கொண்டவள் நீ
சுறுசுறுப்பாய் உழைக்கும் தேனீக்களுக்கும் எறும்புகளுக்கும்
இவ்வையகத்தில் உவமை நீ
வானில் பறந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் போல
பரந்த அறிவு கொண்டவள் நீ
உலகெங்கும் ஒளிபரப்பும் சூரியனைப் போல
அழகிய உதயதாரகை நீ
சிகரத்தின் உச்சி தொடும் அளவு கற்பனையுடன்
வாழும் சாதனையாளர் நீ
உன் வெற்றிக் கொடியை ஏந்தி
உலகை வியக்க வைக்கும் சாதனையாளர்
உனக்கு என் வாழ்த்துக்கள்
✍🏻அகீலா ஜவுபர்
ஏத்தாளை புத்தளம்
No comments