என் பயண வழியில்,
செருப்பின்றி சிரிப்புடன் செல்லும் பள்ளி மாணவியைப் பார்க்கிறேன்
பேர்கர் கடையைக் கண்கொட்டாது
பார்த்துச் செல்லும் ஓர் சிறுமியையும் காண்கிறேன்
தன் தாயவள் முந்தானியில் ஒழிந்து சினிங்கிக் கொண்டிருக்க
ஓர் பிள்ளையையும் கடந்து செல்கிறேன்
கல் தூக்கி வந்த பணத்தில் தன் தங்கைக்கு உணவு கொடுத்து தான் பசியாறும்
ஓர் சிறுவனையும் பார்க்கிறேன்
இவர்களுக்கு வேண்டியதெல்லாம்,
ஓர் சூ
ஓர் பேர்கர்
இல்லையேல் பசிக்கு
புசிக்க ஏதாவது
அவ்வளவுதான்
ஆக இந்த உலகத்தை சந்தோசமாக
வைத்திருக்க இயலாதுதான்
ஆனால் இவர்களின் உலகத்தை சந்தோசமாக வைத்திருக்க இயலுமே
நாம் நினைத்தால்...

(ஓட்டமாவடி)
No comments