புத்தகத்தை எடுத்தவுடன் ஏன்....
புத்தகத்தை எடுத்தவுடன் ஏன் அவசர அவசரமாய்ப் பக்கங்களைக் கடந்து
ஓடுகின்றாய்
நடுப்பக்கத்தை முதலில் படிக்க முயன்றால் உப்பில்லாச் சோறு போலதான் இருக்கும்
இறுதி பக்கத்தை வாசித்து முடிக்க
"என்னடா இந்த புத்தகத்தின் ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் தொடர்பில்லையே " என்று
தோன்றுகின்றதா?
தொடராகப் படிக்காமல் எப்படி தொடர்பு இருக்கப்போகிறது வாசகனே!
முன் அட்டை
அழகாகத்தான் இருக்கும்
பின் மட்டையோ
மங்களாகத்தான் இருக்கும்
உள்ளடக்கத்தைப் பருகாதவரை
வாசகன் என்று கூறுவதால் புத்தகத்தின் வாசம் புரிந்திடாது
பொறுமை கொண்டு
பக்கம் பக்கமாய்ப் புரட்டி
நிதானமாய் நின்று
சொல் சொல்லாய்ப் படித்திட்டாலே புரியும்
அதன் அறுசுவை கொண்டக் கருப்பொருள்
அவ்வாறே வாழ்க்கைப் புத்தகமும்
பொறுமையான வாசகன்
பெறுமதியான வரிகளைக் கண்டு
அதனால் உயர்ந்து நிற்கின்றான்
பொறுமை அற்ற வாசகனோ வெகுமதியில்லா வலிகளைச் சுமந்து கொண்டுப் புலம்பித் திரிகின்றான்
இப்போது புரிகிறதா? வாழ்க்கை ஓர் புத்தகமே என்பதன் பொருள்...

✍🏻 ஷபானா ஆதம்லெப்பை
( ஒட்டமாவடி )
No comments