என்ன நியாயம்?
அவனை எனக்கு அதிகமாகவே பிடிக்கும்
என்று அறிந்தும் , தெரிந்தும்
நான் ஆழ்ந்த உறக்கத்தில்
எனக்கே தெரியாமல் சென்றதன்
இரகசியம் தான் என்ன?
நான் விழித்திருக்கும் போது
வந்திருந்தால்
அவனை மனதார இரசித்து,
அவனுடன் கொஞ்சி விளையாடி
மகிழ்ந்திருப்பேன் அல்லவா?
ஏன் இந்த கோவம்
?

தயவு செய்து மீண்டும் வந்து விடு;
மழையே!!!!!!!!
No comments