சொட்டு நீரையும் சிந்திடக் கூடாதென..
சொட்டு நீரையும்
சிந்திடக் கூடாதென
இறுக்கிக் கொண்டு
தனித்தலைகிறது வானம்
நெட்டி உருண்ட கறுப்பைக்
காணாமலாக்கி
நிர்வாண வெண்மையை
உடுத்துக் கொள்ள
அப்படி என்னதான் கூறியிருக்கும்
மேகத்தின் காதுகளில்
துயர் பிழியும்
இறுதிச் சுவாசிப்பாய்
மங்கிக் கிடக்கும் காடுகள்
மௌனத் தவமிருக்க
இன்னும் எத்தனை நாள்
ஆதி மழையொன்றின் நேசிப்புக்காய்
ஏங்குவதாம்!
வானம்பாடி.
நெட்டி -உடற் பொருத்து
No comments