பணம் என்ன செய்யும்!
தந்தை:- உனக்கு நான் பார்த்த பெண்ணை
திருமணம் முடித்து வைக்கப் போகிறேன்.
மகன்:- என்னால் முடியாது, நான் பார்த்த பெண்ணைத்தான் நான் முடிப்பேன்.
தந்தை:- நான் உனக்கு பில் கேட்ஸின் மகளை பார்த்து வைத்திருக்கிறேன்.
மகன்:- சரி அப்படியென்றால் ஓகே.
தந்தை, பில் கேஸ்டிடம்:- உங்கள் மகளுக்கு எனது மகனை திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்.
பில் கெஸ்ட்:- முடியாது! எனது மகள் சிறியவள், இன்னும் திருமண வயதை அடையும் இல்லை.
தந்தை:- எனது மகன் உலக வங்கியின் துணைத் தலைவர்!
பில் கேட்ஸ்:- ஓ அப்படியா! சரி, நான்
சம்மதிக்கிறேன்.
தந்தை உலக வங்கியின் தலைவரிடம்:-
உலக வங்கிக்கான துணைத் தலைவர் பதவிக்கு என்னிடம் ஒரு சிறந்த இளைஞன் இருக்கிறார்.
உலக வங்கித் தலைவர்:- எங்களிடம் ஏற்கனவே பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இப்போதைக்கு பதவி வெற்றிடமும் இல்லை.
தந்தை:- அந்த இளைஞன் பில்கேட்ஸின் மருமகன்.
உலக வங்கித் தலைவர்: ஓ அப்படியா! சரி அவரை நான் கட்டாயம் நியமிக்கிறேன்.
◾சிலர் இப்படித்தான் உருட்டிப் புரட்டி வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.
No comments