எவ்வளவு பெரிய சோகமாக இருக்கட்டும்
எவ்வளவு பெரிய சோகமாக இருக்கட்டும்,
எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கட்டும்,
எவ்வளவு பெரிய தோல்வியாக இருக்கட்டும்,
என்னை நாடி வருபவர்களிடத்தில்
ஒருபோதும் வாய்க்கு வந்தபடி பேசி கடிந்துகொள்வதில்லை.
யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்,
நண்பர்களோ, அந்நியர்களோ
நலம் விசாரித்து மலர்ந்த முகத்துடன்
வழியனுப்பி வைத்துவிடுவேன்.
சோகம்,
வலி,
தனிமை என முடங்கி
எதையும் கண்டுகொள்ளாமல்
கடந்து சென்றுகொண்டே இருந்தால்,
சிலவேளை, நமக்காக வாய்ப்புகளும்
நம் முன்னே கடந்து செல்வதும் விளங்காது.
மவுனா
No comments