நம்ப முடிகிறதா?
படத்தில் இருக்கும் இடம் சிங்கப்பூர் என்பதையும், அங்கே வீதி சுத்தம் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர் சிங்கப்பூரின் பிரதமர் என்பதையும்...
ஒரு காலத்தில் மலேஷியாவின் குப்பை கொட்டும் இடமாகவும், மழை காலங்களில் வெள்ளநீர் தேங்கி மலேரியா நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாகவும் இருந்த சிங்கப்பூரை உலகத்தரம் வாய்ந்த நாடாக உருவாக்கியவர் 1959-1990 வரை சிங்கப்பூர் பிரதமராக இருந்த Lee Kuan Yew. இவர், தான் சிங்கப்பூரின் பிரதமராக வந்த ஆரம்ப நாட்களில் சுத்தமான நாடுதான் ஆரோக்கியமான மக்களை உருவாக்கும், ஆரோக்கியமான மக்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நாட்டை சுத்தம் செய்யும் பணியை தனது முதல் கடமையாக மேற்கொண்டார்...
இதற்கெல்லாம் அடிப்படை காரணம் அவரின் அம்மாதான் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் லீ குவான் யேவ்வின் பாடசாலை காலங்களில் அவரது தாய் தினமும் பாடசாலை யூனிஃபோர்மை துவைத்து அயன் செய்து தான் அனுப்புவாராம். அவர் பாடசாலை செல்லும் போது அவரிடம் தாயார், நீ அங்கு சென்றதும் யாரையும் எதிர்பார்க்காமல் பாடசாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். உனது கண்ணில் படும் அழுக்குகளை அகற்ற வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்புவாராம்...
Note:- இன்று கல்வியில் முன்னேற்றம் கண்ட ஜப்பான் போன்ற பல நாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை சுயமாக சுத்தம் செய்யும் பணிகள் தான் முதலில் கற்பிக்க படுகிறது. நாமும் எமது பிள்ளைகளுக்கு பாடசாலையில் இருந்தே சூழல் சுத்தம் பற்றி சொல்லிக் கொடுப்போம்...
No comments