காதல் தலைக்கனம் ..
நீயும் நானும்
கைகோர்த்து நடப்போம் வா
நேற்று நடந்ததைப்போல
கைகோர்த்து நடப்பவர் யாருண்டு
நம்மைத் தவிர இந்தப்
பிரபஞ்சத்தில்
என் -
குறும்பு பேச்சில்
நீ நொறுங்கிப் போவதைப் போல்
எனை கிரங்கடிப்பாயே
நம்மைப்போல யாருண்டு
குறும்புச்சண்டைக்கார
காதல் சோடிகள்
வித விதமாய்
என் சினுங்கல்களை
சொல்லிச் சொல்லி ரசிப்பாய்
நம்மைப் போல யாருண்டு
செல்லச் சண்டை போட
நான் உன் குழந்தை
உனக்கு நான் குழந்தை
எப்போதுமே நீ எனை
குழந்தையாய் பார்க்கும்வரை
நம்மைப் போல் யாருண்டு என்பது
என் காதல் தலைக்கனம்
நிஸா இஸ்மாயீல்
No comments