ஒரு சிறுவனின் செருப்பை கடல் அலை அடித்துச் சென்றது...!
ஒரு சிறுவனின் செருப்பை
கடல் அலை அடித்துச் சென்றது...!
அவன் கடற் கரை மணலில் "இக்கடல்
ஒரு திருடன்" என எழுதிவைத்தான்...!
ஒரு மீனவனுக்கு அபரிமிதமான
மீன்களை கடல் அள்ளிக் கொடுத்தது...!
அவன் கடற் கரையில் "வாரிவழங்கும்
கடல் " என பதிந்து வைத்தான்...!
கடலில் முத்துக்குளிக்கும்
ஒருவனுக்கு முத்துக்கள் கிடைத்தன...!
அவன் கடற் கரையில் "வளம் மிக்க கடல் " என்று எழுதி வைத்தான்...!
இளைஞன் ஒருவன்
கடலில் மூழ்கி மரணித்தான்...!
அவனது தாய் " இது ஒரு கொலைகாரக் கடல் " என எழுதிவைத்தாள்...!
பின்னர் ஒரு பேரலை வந்து அவர்கள் கரையில் பதிந்து வைத்த யாவற்றையும் அழித்துவிட்டு, கடல் அதன் பாட்டில் அன்றாடப் பணியை தொடர்ந்தது...!
மனிதர்கள் சொல்வதெயெல்லாம் மனதுக்குள் எடுக்க வேண்டியதில்லை...!
அவரவர் தங்களின் அனுபவத்தை மாத்திரமே தெரிவிப்பார்கள்...!
பலவேளை ஜெயிக்க வேண்டுமெனில் காதை மூடிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கவேண்டியதுதான்...!
ஆனால், ஆரோக்கியமான புத்தியோடும், தெளிவான பார்வையுடனும் அவதானமாக பயணிப்பது மிக முக்கியமாகும்...!
✍ தமிழாக்கம் / imran farook
No comments