Breaking News

நம்பிக்கைத் துரோகி !

 

   
அந்த ஊரின் பிரபல்யமான  பலசரக்குக் கடையது. பல வாடிக்கையாளர்களின் நன் மதிப்பைப் பெற்

றது. சனூஸ் முதலாளி மக்களோடு அன்னியோன்னியமாகப் பழகுவார். இல்லையென்னாது  வருவோருக்கு வாரி வாரி

வழங்குவார்.

                அந்த வகையில் தஸ்கீம்,கடைக்கு வந்து சனூஸ் 

முதலாளிக்குஉதவிகள்  செய்வான். சம்பளத்தை எதிர்பார்க்க 

மாட்டான். முதலாளியும் பார்த்தும், பார்க்காமலும் கொடுப்பார்

                 சனூஸ்  முதலாளியின் உள்ளத்தில் தஸ்கீம் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டான். அவனில் முழு நம்பிக்கை ஏற்பட்டது.

                      சனூஸ் முதலாளி  நிறுவனமொன்றில் இலிகிதராக்க்  கடமை புரிவதால், தலைக்கு மேல் வேலைகளிருந்தன. அவற்றைச் செய்து முடிக்கவே  போதும்

போதுமென்றகிவிடும்.

                       எனவே..

                            கடையைத்  தஸ்கீமிடம்  ஒப்படைத்தார்.

அவன  நம்பிக் கடைய ஒப்படைக்காதீங்க. பின்னால கஷ்டப்பட  வேண்டி வரும். இந்தக் காலத்தில யாரையும்

நம்பலாகாது.மனைவி புறுபுறுத்தாள்.

                              சும்மா  போ.. எதற்கெடுத்தாலும்  தொண

தொணக்காம, மனிசனுல நம்பிக்கை வேணும்.தஸ்கீம் அப்படிப்பட்டவனல்ல. ஒரு  நாளாவது வாய் தொறந்து சம்பளம்  கேட்டிருக்க மாட்டான். அவ்வளவு  மானஸ்தன். எல்லாருலேயும்  சந்தேகிக்கலாமா...? நம்ம கடையை யார்

பார்த்துக்  கொள்வது..? உன்னால கடையில நிற்க முடியுமா..? சனூஸ்  முதலாளி மனைவியின் வாயை அடக்கினார்.

                 அதன் பின் தஸகீமைப்  பற்றி முதலாளியின் மனைவி எதுவுமே பேசுவதில்லை.நாய்க்கேன்  தோல் தேங்காய்..? வாயைப் பொத்திக்கிட்டுப்  பேசாம இருந்தாச் சரி. நாம ஒன்று சொல்ல, அவர் கோபப்பட நமக்குத் தேவையில்லாத வேலை. அவராச்சு..! அவர்ட கடையாச்சு..!

மௌனமானாள்.

                     கடை நன்கு முன்னேற்றம் கண்டது. முதலாளி

கூடுதலான  சாமான்களை வாங்கி வாங்கி நிறைந்தார். சிலவற்றை விற்றுச் செக்கில் காசு போடுவதாக்க் கூறினார்.

அதற்கமைய  சொன்ன வாக்கை மீறாமல் குறிப்பிட்ட  தினத்தில் பணத்தை வங்கியில் போடுவார்.கடையும் களை

கட்டியது . 

              கொழும்பிலுள்ள முதலாளி  தனது பணத்தை உடனடியாக  அனுப்பி வைக்குமாறு கூறினார்.

                             சனூஸ்  முதலாளி திண்டாடினார்.அவரால் நிம்மதியாக இருக்க முடியல. தலையைச் சொறிந்து.. சொறிந்து போவதும், வருவதுமாகத் தடுமாறினார்.

                                     கடனுக்கு வாங்கிச் சென்றவர்கள்

எக்கச்சக்கம். அவ்வளவு பேரும் தந்தால்.. செக்கையும் போட்டு,இன்னும் சாமான்களும் வாங்கிப் போடுவேன்.

யார் தரப்போறான்கள்..? கேட்டால் பகைதான் வளரும்.

                                    ஜூஹைப் நோன்புப் பெருநாளைக்குப்

பெருநாளைக்குப்  பலகாரம் செய்து விற்பதற்காகப் பத்தாயிரம்  ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கிச்

சென்றான். பெருநாள் முடிந்ததும் திருப்பித் தருவதாகக்

கூறினான்.இரண்டு வருடங்களும் கடந்து விட்டன.பணம் தருவதாக இல்லை.

                           வீட்டுக்குப் போய்க் கேட்ட போது, மடிக்குள்ளயா  காசைக் கட்டிவச்சிருக்கேன்.?இப்ப

எனக்கிட்ட பணமில்ல.கிடைச்சக்குள்ள தாரேன். எவ்விதத்

தயக்கமுமில்லமல்  கூறினான். என்ன உலகமிது..!

                                   நாம பொருளையும் கொடுத்து, அவங்கக் கிட்டப் பிச்சையும் கேட்டுப போகனும்.முதலாளி

தனக்குள்ளே சிரித்துக் கொண்டார்.

                                     அல்லாஹ்வே..!என்ன செய்றது..?

ஒன்னுமே புரியலேயே..!

                                முதலாளியின்  நிலையைப் புரிந்தவள், தனது நகையில் ஒன்றைத்தூக்கிக்  கொடுத்து, இதை விற்றுப் பணத்தைச் செக்கிற்குப்  போடுங்க என்றாள்.

                                     ஐந்து  பவுண் நெக்லஸை மனைவியிடம் வாங்கித் தஸ்கீமிடம் கொடுத்து,இதை வங்கியில்  அடகு வைத்து வா என அனுப்பி வைத்தார்.

                                      அவனும் அடகுவைத்து விட்டுப் பணத்தை முதலாளியிடம் ஒப்படைத்தான்.அக்காசை

முதலாளி வங்கிக் கணக்கில் போட்டார்.

                                         இப்போது தான் சனூஸ் முதலாளிக்குப்  போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்தது.சொன்ன திகதிக்குள் கொடுக்காதிருந்தால்..

அவன்  என்னை என்ன நினைப்பான்..?என்ன முகத்தோட போய் அவனிடம் மீண்டும் கடன் கேட்பது..?  நல்ல வேளை 

மனைவியின் நகை உதவியது.

                                வழமை போல கடையில் வியாபாரம்

நன்கு விற்பனையானது. அடகு வைத்த நகையை மீளப் பெறு

வதற்குப் பணத்தைக் கொடுத்துத் தஸ்கீமிடம் எடுத்து வருமாறு முதலாளி  கூறினார்.

                                  அவற்றைப் பெற்றவன்,வியாபாரம் செய்வதிலேயே முழுக் கவனத்தையும்  செலுத்தினான்.

      முதலாளி வேலை முடிந்து வந்து தஸ்கீமை  விசாரித்த

போது...

                கடையில்   மும்முரமாக வியாபாரம் செய்ததால, நேரம் போனதே தெரியல.நாளைக்குக் கட்டாயம் எடுத்துத்

தருவதாக்க்  கூறினான்.

                            மறு நாளும் இதே பதிலே தஸகீமிடமிருந்து வந்தது. சரி.. சரி..பரவாயில்ல..! ரெண்டு நாட்கள் கழிந்து

விட்டன. மூன்றாவது  நாளும் இதே  பதில் வரக் கூடாது.

கடையை மூடிவிட்டு  முதலில் அடகு வைத்த நகையை எடுத்து வா. வேறு சாட்டுச் சொல்லக் கூடாது. அன்பு கலந்த

கண்டிப்புடன் முதலாளி கூறினார்.

                                         சரி முதலாளி..!

                                                 அடுத்த நாள் தஸ்கீம் காய்ச்சல்

காரணமாக்க்  கடைக்கு வர முடியல எனச்  சொல்லியனுப்பினான். தொடர்ந்து  மூன்று  நாட்கள் வீட்டிலிருந்தான்.

                          சனூஸ்  முதலாளி  லீவு போட்டுட்டுக் கடை

நிலிருந்தார். அன்றிரவு தனது மனைவியையும் அழைத்துக்

கொண்டு தஸ்கீமைப் பார்க்கச் சென்றார்.

                                 தஸ்கீம்  பெரியதொரு மாளிகை அமைத்திருந்தான். எல்லோரும் சொல்லும் போது நம்பல.

  இப்ப தானே தெரியுது எவ்வளவு பெரிய மாளிகை அமைத்திருக்கான்னு.இவனுக்கு இவ்வளவு பணம்  எங்கால..?நானும்  கணக்கு  வழக்குப் பார்ப்பதில்ல. என்ன

நடக்குதோ..?  அல்லாஹ்வுக்கேவெளிச்சம். முதலாளியின்

மனதில்  கேள்வி மேல்  கேள்வி எழுந்தது.

                                       முதலாளியைக் கண்டதும்  தஸ்கீமுக்குத் தூக்கி வாரிப் போட்டது.வேர்த்து  விறு விறுத்துப் போனான்.

                             என்ன  தஸ்கீம்..? காய்ச்சல் எப்படி..?

                                   முதலாளி..!

                   இப்ப கொஞ்சம் பரவாயில்ல. குளிசை போட்டதால சரியா வேர்க்குது. நாளக்கி எப்படியும் வரப் பார்க்கிறேன்.

             அப்படின்னா..!

      அடகு வச்ச நகையை எடுத்துத் தந்திடு.

     சரி முதலாளி என்றவன்,

                         மறு நாள் காலையும் வரவில்லை. சனூஸ் முதலாளிக்குக்  கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

                            நான்  எத்தனை நாளக்கி லீவு போடுறது..?

அடகு வச்ச நகையை இன்னும் எடுக்கல்ல.இருக்கிற பணமும்  செலவாகிடும்.இவன் என்ன பண்ணுறான்..?இவனெல்லாம் பெரிய  இடத்துல  தூக்கி வச்சேன். எனக்கி  

வேணும். இனி  இவனக் காத்து வேலையில. நாம் போய்   எடுப்பம்.

                 அடகுச் சீட்டுடன் பணத்தையும் கொண்டு போய்

வங்கியில் நகையைக் கேட்டார்.அதை எப்போதோ எடுத்தாச்சு. தஸ்கீம் என்பவரே எடுத்திருக்கிறார்.இஞ்சேப்

பாருங்க காட்டினார்.

                          முதலாளிக்குப்  பெரியதொரு பாறாங்கல்

லைத் தூக்கிப்  போட்டால் போலிருந்தது. ஏன்ட அல்லாஹ்!

அது தான் அவன் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம சாக்

குப் போக்குக் கூறி நாட்கள நகர்த்திருக்கான். தோலிருக்

கச் சுளை வாங்கியிருக்கான்.இவனோட கள்ளத்தனம்

யாருக்குத் தெரியும்.?

                          நேரே தஸ்கீம் வீட்டுக்குச் சென்று, டேய்..!

தஸ்கீம்.. என்ன வேல செய்திருக்கிறாய்..? இது உனக்கே

நல்லா இருக்கா..? நம்பிக்கைத் துரோகி... வீடதிரக் கத்

தினார. இந்தக் காலத்தில யாரையும் நம்பாதீங்கனு ஏன்ட

மனைவி படிச்சுப் படிச்சுச் சொன்னாள. நான் கேடகல. நீ

செய்த கைம்மாறு இது தானா ..?

                           முதலாளி என்னை மன்னிச்சிடுங்க.வீடு 

கட்ட கஷ்டம் வந்ததால, அடகு வச்ச ரிசீட்டைக் காணவில்லை. எனக் கூறி கிராம சேவகருடம் கடிதம்

வாங்கி நகையை எடுத்து வித்திட்டேன். நீங்க ஏசிவீங்கனு 

பயத்தில  சொல்லல்ல.

                            உனக்கு எவ்வளவு துணிச்சல்டா..? நீயெல்

லாம் ஒரு மனிசனா..? நான் மன்னிக்காம அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான். நெனவுல வச்சுக்கோ..!

                                  கடையிலுள்ள பணமெல்லாம் வழிச்சுத்

தொடைச்சு ஒரு சதக் காசில்லாம எடுத்திட்டான். அவன் 

நல்லா இருப்பானா..? சனூஸ் முதலாளி அரைப் பைத்திய மானார்.

               தஸ்கீம் விடிந்தும் விடியாத்துமாய் குடும்பத்துடன்

ஊரை விட்டே வெளியேறினான். இச்செய்தி கேள்விப்பட்ட

ஊர் மக்கள், அவன் செய்த காரியத்தைப் பாரு...? முதலாளி

யின் மனம் பத்திராப் போல பத்தித்தான் போவான். நம்பிக்கைத் துரோகி எனத் திட்டித் தீர்த்தனர்.

No comments