Breaking News

யாதும் நீயே.( இறுதி அத்தியாயம்)


 


         அவனவள்      


             ஆதி  தன் குழந்தைகளை  கண்களில் நீர் நிறையப் பார்த்தவன்


          தரையில் அமர்ந்து   அவ்விருவரையும் தன்  நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.


         இந்த மூன்று வருடங்கள்  எந்த சந்தோஷத்திற்காக ஏங்கினானோ   அது கிடைத்து விட்ட உணர்வு.


          குழந்தைகள் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டான் ஆதி.


தித்யா : " என்னாச்சு டார்லிங் "


ஆதி : " நத்திங் குட்டிமா , நீங்க இனி என் கூடவே வந்துடுறீங்களா "


தித்யா : " ஐ ஜாலி இனி அப்போ குட்டி தம்பி கூடவே இருக்கலாம்" என்றாள்.           ஆதி  தன் பையனை கைகளில் ஏந்திக் கொள்ள


         தித்யாவும் ஷாலுவும் கை கோர்த்து கொண்டு 


            அவர்கள் அருகில் சென்றனர்.


 " தங்கச்சி  தித்யாவ எனக்கே குடுத்துடுறியா " தயங்கியவாறே கேட்டான் ஆதி.      ஷாலு: " அவ உங்க பொண்ணு உங்க கிட்ட ‌ ஒப்படைக்கிறதா  அபிக்கு  வாக்கு கொடுத்துறுக்கேன்."


 

       தித்யா அருகில் சென்ற ஷீபா


" தித்யா குட்டி பெரிய பொண்ணு தானே நான் சொல்லுறத புரியும் தானே " என்றாள்.   "   ஓஓஓ.. நான் பெரிய பொண்ணு ," என்றாள் தித்யா.


ஷீபா : " ஆதி உனக்கு அப்பா , அபிம்மா உன் அம்மா "


தித்யா உதட்டை பிதுக்கிக் கொண்டு  "நீ  "என்று கேட்டாள்.


      ஷீபா: " அபிம்மாவ சாமி கூப்பிட்டு எடுத்துக் கிட்டாரா , அதான் தித்யா வ நான் எடுத்துக் கிட்டேன்.  ஆனால் அப்பாக்கு  யாருமே இல்லை"         என்றதும்  தித்யா பாய்ந்து ஆதியின் கழுத்தை கட்டிக் கொண்டு " டார்லிங் இனி நானும் குட்டி தம்பியும் ஒன் கூடவே இருப்போம்.  அப்போ நீ தனியா இருக்க மாட்ட தானே " என்றாள்.      ஆதியும்  அவள் விழுந்து விடாமல் இருக்க ஒற்றைக் கையால் பற்றிப் பிடித்தவன் " ஆமா  குட்டிமா " என்றான்.        இவர்கள் பாசப் பிணைப்பை கண்ட காயத்ரி   கை தட்டியவாறே " என்னா ஒரு பாசம்  உன்னை சாகும் மட்டும் பழி வாங்க நினச்சேன்  பட் அது   முடியில, ஆனால்  அந்த சனியன உன் கிட்ட இருந்து பிரிச்ச  சந்தோஷம் போதும்" என்று  கிளம்பி சென்று விட்டாள்.


    ஷீபா ஷாலுவை இடுப்பில் தூக்கிக் கொண்டு  


     ஜகன் புறம் திரும்பியவள் " உன்னை காதலிச்சதுக்கு   என்ன நானே கொளுத்திக் கலாம்.

      இனி காலம் முழுக்க தனியா வாழு  உன் மூச்சு காத்து கூட என் பொண்ணு மேல பட விடமாட்டேன் " என்று  கூறி விட்டு சென்றாள் ஷீபா.


         ஆதி குழந்தைகளை கீழ் இறக்கி விட்டு


        " நீ எனக்கு பன்னத மறக்க மாட்டேன், எல்லாம் இந்த பணத்துக்கு வேண்டி தானே காயத்ரி கூட சேர்ந்து என் அபிய என் கிட்ட இருந்து பிரிச்ச  இந்த பிடி" என்று 


      அவன் தன்னவள் பெயரில் வாங்கிய வீட்டின் சாவியை 


     அவன் முகத்தில் தூக்கி எறிந்த ஆதி தன் குழந்தைகளை கைகளில் தூக்கிக் கொண்டு சென்றான்.


       ஜகனோ எதுவும் பேசாமல்,  போகும் அவர்களையே வெறித்துப் பார்த்த படி நின்றான்.மூன்று வருடங்களுக்குப் பிறகு....


        ஜகன் இரண்டாம் திருமணம் செய்து வாழ்கிறான். 

 ( இப்படிப் பட்டவர்கள் ஒரு போதும் தன்னைத் திருத்திக் கொள்ள மாட்டார்கள்.


        தற்போது உணர முடிகிறது இவன் ஷீபா மீது கொண்ட காதல் வேறும் கவர்ச்சி என்று)


     

          ஷீபாவோ  அவனை எந்த அளவு நேசித்தாலோ  அதே அளவு வெறுப்பை வளர்த்துக் கொண்டு 

தன் மகளுக்காக வாழ்கிறாள்.


       

       அன்று காலையில் 


ஒரு  அளவான வீட்டில்   ஆறு வயது தித்யா‌   ஆதியையும் கண்ணணையும்  அமர வைத்து சாப்பாடு  ஊட்டினாள்.


   

      தித்யா உருவில் தன்னவள்  தன்னிடம் மீழ வந்து விட்டாள் என்று உணர்ந்த ஆதி


      அங்கு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த அபிநயாவின்  புகைப்படத்தை பார்த்து  புன்னகைத்துக் கொண்டான்.


         இருந்தும்  அந்தப் புன்னகையில் ஒரு வலி இளையோடியது 


              

          தன் பிள்ளைகள் தன்னுடன் இருந்தும்

அவனால் தன்னவள் இழப்பை ஈடு கட்ட முடியவில்லை.


          இனியும் தன் உயிருள்ள மட்டும்  தன்னவளை நெஞ்சில் சுமந்து கொண்டு 


      தன் பிள்ளைகளுக்காக  வாழப் போகிறான் என்பதில் ஐயமில்லை....

 

          முற்றும்


       ✍️  Muhsina saththar.

No comments