Breaking News

தனிமையை ரசிக்கத் தெரிந்தால்..


தனிமை கூட இனிமை தான்
யாரும் வந்து குழப்பாத வரை
தெளிந்த நீரோடை தான் அது..
வயது வேறுபாடின்றி
அனுபவிக்கும் ஓர் உணர்வு தான்
தனிமையே நீ..
தாயைப் பிரிந்த சேயும் தனிமை தான்
பிள்ளைகள் பிரிந்து போனால்
தாயும் தனிமை தான்
கணவன் விட்டுப் போனால்
மனைவியும் தனிமை தான்
மனைவியைப் பிரிந்து போனால் கணவனுக்கும்
தனிமை தான்

தூளியிலே ஆடிய குழந்தை
தவழ்ந்து வந்தால்
தூளிக்கூட ஆட்டம் போடும்
தனிமையில் தான்

மாணவன் வீடு வந்தால்
பள்ளிக்கூடமும் தனிமை தான்
கல்லூரியை விட்டு வந்தால்
ஆசிரியரும் தனிமை தான்
ஊழியர்கள் போகா விட்டால்
காரியாலயம் தனிமை தான்
பயணிகள் இறங்கி விட்டால்
வண்டிக்கும் தனிமை தான்

குடும்பமே வெளியில் சென்றால்
மனைக் கூட தனிமை தான்
சனங்கள் கலைந்து போனால்
கடற்கரையும் தனிமை தான்
அறுவடை முடிந்துவிட்டால்
வயல்வெளியும் தனிமை தான்
நிலவு தூங்கினால் வானத்திற்கும்
தனிமை தான்

தீ அணைந்து போனால்
அடுப்பு கூட தனிமை தான்
சாதம் தீர்ந்து போனால்
பாவம்...
பானை கூட தனிமை தான்
ஊர் அடங்கிப் போனால்
நாட்டுக்கும் தனிமை தான்
தனிமையெல்லாம் இப்படி இருக்க
உனக்கும் எனக்கும் என்ன தனிமை
தனிமையில் இனிமை காண்போமே
இனிமையாய் கலையை ரசிப்போமே
All rea

No comments