நானிலம் போற்றும் நல்லாள் ..
வீட்டில் அமைதி நிலவச் செய்வாள்
விருந்தினரை அன்பாய் அழைத்திடுவாள்
கெட்ட வார்த்தை பேசவும் மாட்டாள்
கெடுதி செய்ய நினைக்கவும் மாட்டாள்
விட்டுக் கொடுத்தே வாழ்ந்திடுவாள்
விரைவாய்க் கடமை முடித்திடுவாள்
கணவனைப் பெரிதாய் மதித்திடுவாள்
கனிவாய் மனதைத் தேற்றிடுவாள்
கண்ணியமாய் என்றும் நடந்திடுவாள்
கற்பினைப் பேணிக் காத்திடுவாள்
பெண்ணின் பெருமை சேர்த்திடுவாள்
பலரும் போற்ற வாழ்ந்திடுவாள்
பிள்ளைகளைக் கண்ணாய்க் காத்திடுவாள் - வாழ்வில் பிரச்சினை ஏழாமல் தடுத்திடுவாள்
சொல்லில் இனிமை கலந்திடுவாள் - என்றும்
சொந்தம் பந்தம் அணைத்திடுவாள்
நல்லோர் வாழ்ந்த நடந்திடுவாள் - தினம்
நானிலம் புகழ வாழ்ந்திடுவாள்
ஜெனீரா தௌபீக் ஹைருல் அமான்
கிண்ணியா
No comments