Breaking News

அவனில்லாத போது...

 

அவனில்லாத  போது...

                        படிக்கும் காலம் தொட்டு இன்று வரை றிஸ்னாஸ் பயணித்துக் கொண்டே இருக்கிறாள். இதை

நினைக்க..நினைக்க உள்ளம் வேதனைத் தீயால்  கொழுந்து விட்டெரிகிறது.

                 துள்ளித் திரியும் பள்ளிப் பருவத்தில் பயணம்

செய்வது சந்தோசமாகவே  இருந்தது. எந்த நேரத்தில்

வீட்டுக்குச் சென்றாலும் உம்மா சமைத்து வைப்பாங்க.

அவற்றைச் சாப்பிட்டு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால்

அன்றைய பொழுது கலகலப்பாகச் சென்று விடும்.

                         இப்போது திருமணமாகி ஒரு குழந்தைக்குத்

தாய்.அவனைப் பிரிந்து செல்வதென்றால்..மலையைப்

பிளப்பது போல கடினமானது.பாடசாலைக்கு ஆயத்தமா

னால்...உம்மா..!நானும்..நானும்..அவனது அழுகையை

நிறுத்த முடியாது.

                     றிஸ்னாஸ் டீச்சரின் உள்ளம் ஓவென அழுது

புலம்பும். மகனைத் தாயிடம் கொடுத்து விட்டுத் திரும்பிப்

பார்க்காமல் விறுவிறு என நடந்து செல்வாள்.மகன் தேமிய

ழும் சத்தம் காதில் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.

                        உம்மா மகனைப் பார்ப்பதால் காலை,மதிய

சாப்பாட்டுக்கான வேலைகளை இரவிலேயே செய்து முடித்து

விடுவாள்.மகனின் பின்னால் ஓடியோடியே உம்மா களைத்து

விடுவாங்க.

               இதெல்லாம் பார்க்கும் போது றிஸ்னாஸ் டீச்சருக்கு

தொழிலே வேணாம்னு போகுது.வீட்டிலே சும்மா இருந்து

விடலாம் போலிருக்கும்.

                              சில நேரங்களில் பஸ்ஸில் நிற்கக் கூட

இடமில்லாமல் மாணவரகளும்,ஆசிரியர்களும்,வேறு தொழில்

களுக்குச் செல்வோரும் நிரம்பி வழியுவார்கள்.பல சிரமங்க

ளையும் பொருட்படுத்தாமல் பாடசாலைக்கு வந்து சேர,

பிங்கர் பிரின்ட்8.00 மணியைக் காட்டும்.

                                 இவ்வாறு தொடர்ந்தால்..நேரம் பிந்தி

வந்தமைக்கு   லீவுகள் அநாவசியமாகக் கழிக்கப்

படுகிறது.வந்தும்..வராமல் லீவு கழிகிறது என நினைத்தால்...

பாடசாலை வாழ்க்கை வெறுக்கிறது.இது யாருக்குப் புரியப்

போகிறது..?

     அதுமட்டுமா..?

                ஓரிடத்தில் அமரந்திருக்க முடியாது.இடுப்பு வருத்தம். நெருப்பில் கால் மிதித்தது போல..அங்குமிங்கும்

தொங்கோட்டம் ஓடுவது தான்.

                        இந்தச் சின்ன வயதில் இவ்வளவு கஷ்ட்டமா..?

சில ஆசிரியர்கள் வாயைப் பிளப்பார்கள்.எதுவும் தனக்கு

வந்தால் தான் தெரியும்.அழுத்துக் கொள்வாள் றிஸ்னாஸ்

டீச்சர்.

              பாடசாலை முடிவடைந்ததும் நீண்டதொரு வரிசை

நிற்கும். தூரச் செல்லும் ஆசிரியர்களுக்கு விட்டுக் கொடுப்போமே என்ற மனப்பான்மை எந்த ஆசிரியர்களிடத்

திலும் வராது.

                       உரிய நேரத்திற்குச் செல்லும் பேருந்து

சென்று விடும்.புகாரியடியில் வெகு நேரம் காத்திருக்க

வேணும்.வீடு சென்றடைய மாலை5.30 ஐயும் தாண்டி

விடும்.மகன் தாயை எதிர்பார்த்துத் தவம் கிடப்பான்.

                             மறு நாள் அதிகாலையுடன் பேருந்தில்

ஏறிக் கொண்டாள்.மக்களை ஏற்றிக் கொண்டு பேருந்து 

புறப்பட்டது. சிலர்  ஏறியும்,இறங்கியும் பயணத்தைத்

தொடர்ந்தனர்.

            அப்போது...

சுருட்டை முடி,அடர்ந்த தாடி,கறுப்பு நிறமுடைய ஒருத்தன்

றிஸ்னாஸ்  டீச்சரை வைத்த கண் வாங்காது பார்த்துக்

கொண்டிருந்தான். அவன் பார்வை அவளை அச்சமடைய

வைத்தது.எதற்காக இப்படிப் பார்க்கிறான்..?வருவதும்,

போவதுமாக நடமாடிக் கொண்டிருந்தான்.

          திருடனாக இருப்பானோ..?  அல்லது

          போதைக்கு அடிமையானவனோ...?

அவளது  உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள் எழுந்து மறைந்தன.

                   அவன் றிஸ்னாஸ் டீச்சரின் அருகில் வந்தான்.

கடித உறையை நீட்டினான்.அவளுக்குஅதைக் கைநீட்டி வாங்குவதற்கு

தயக்கமாக இருந்தது.எனக்கெதற்குத் தருகிறான்..?அக்கம்

பக்கம் பார்த்தாள்.யாரும் கவனிப்பதாக இல்லை.

         மெதுவாக வாங்கிக் கொண்டாள்.

          விரித்துப் பார்த்தாள்.

அதற்குள் 5000 ரூபாய் தாள் காசு இருந்தது.கடித உறையில் பெயர் எழுதப்பட்டிருந்தது.

          அப்பாடா..!

போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.நன்றி கூறுவ

தற்குள் அவன் பேருந்தை விட்டு கீழிறங்கி மறைந்து விட்

டான்.எங்கே தேடுவது..?

                     ஒருவரின் உருவத்தைப் பார்த்து எடை போடக்

கூடாது என்பதைப்  புரிந்து கொண்டாள்.அவன் நினைத்தி

ருந்தால் பணத்தைத் தராமலிருந்திருக்கலாம்!இந்தக்

காலத்திலும் நல்லபிமானமுள்ளவனும் வாழ்கிறான் என்பதற்கு

சிறந்ததொரு எடுத்துக் காட்டு.

                        அப்பணம் வேறு யாருடையதுமல்ல. நண்பி

நதா டீச்சருடையது தான்.அதைக் கொடுக்கும் வரை நதா

வுக்குத் தெரியாது.பணத்தைத் தேடினாள்.எங்கையுமே

இல்லை.

               நடந்த சம்பத்தை றிஸ்னாஸ் டீச்சர் கூறினார்.

இருவரும் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கையில்,அவன்

அவ்விடத்திலில்லை.


ஜெனீரா தௌபீக் ஹைருல் அமான்

No comments