யாதும் நீயே...23
அவனவள்
" உங்கப் பொண்ணு சாகல உங்களோட தான் இருக்கா " என்றபடி
அங்கு வந்த ஷீபாவை பார்த்த மூவரும் அதிர்ந்து நின்றனர்.
அருகில் வந்த ஷீபா " ஆதி அண்ணா உங்க பொண்ணு பிறந்ததுல இருந்தே உங்க கூட தான் இருக்கா " என்றாள்.
ஆதி : " நிஜமா தான் சொல்றியா தங்கச்சி "
ஷீபா: " தித்யா பத்தி என்ன நினைக்கிறீங்க "
ஆதி : " எதுக்கு இந்த கேள்வி, என் பொண்ணு இருக்காளா "
ஷீபா : " எல்லாம் காரணமா தான் சொல்லுங்க "
ஆதி : " அவ என் உசுரு, அவளோட ஒவ்வொரு செயலும் எனக்கு என் அபிய அதிகமா நியாபகப் படுத்தும் போதுமா "
" இதுலயே உங்களுக்கு தெரிய வேண்டாமா தித்யா உங்களோட பொண்ணுன்னு " என்று கேட்டாள் ஷீபா
" உண்மையில் தான் சொல்றியா தங்கச்சி. தித்யா குட்டி என் பொண்ணு தானா" என்றான் ஆதி
தித்யா தன் உயிர் என்று அறிந்ததும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
ஷீபா: " உங்க அபி மேல சத்தியமா அவ உங்க பொண்ணு தான்"
ஜகன் : " ஷீபா நீ என்ன உலர்ற"
ஷீபா : " ச்சீ உன் வாயால என் பெயர சொல்லாத, இது வரை நீ குழந்தையை குப்பையிலே போட்டதா தான் நினச்சிருந்தன் . நீ அபிநயா உயிரையே எடுத்துட்டியே"
ஆதி : " அவன் கூட அப்புறம் பேசிக்கோ, என் பொண்ணு எப்படி உன் கிட்ட "
காயத்ரியோ" நான் ஒன்னு நினச்சா விதி ஒன்று நினைக்கிது " என்று கூறினாள்
ஷீபா : " அதான் அபிய கொன்னுட்டீங்களே அது பத்தல என்றவள்
அன்று நடந்த வற்றை கூற ஆரம்பித்தாள்.
அன்று...
ஆதியும் அபியும் அனுமதிக்கப் பட்ட வைத்திய சாலையிலே
ஷீபா குழந்தை பெற்ற மயக்கத்தில் வார்டில் படுத்திருந்தாள்.
சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்கவே கண் விழித்துப் பார்த்தாள்
அவ்விடம் முழுவதும் தன் தாயை தேடிய ஷீபா
அவர் அங்கு இல்லை என்றதும்
தன் குழந்தையை தட்டிக் கொடுத்து தூங்கச் செய்தவள்
வெளியே வந்தாள். அங்கும் தன் தாய் இல்லை என்றதும்
ஹாஸ்பிடல் வாசலுக்கு வந்து பார்த்தவளுக்கு
ஜகன் ஒரு குழந்தையை குப்பை தொட்டியில் இடும் காட்சியே கண்களில் பட்டது.
அவன் சென்றதும் குழந்தையை கையில் எடுத்த ஷீபா
பேபி வார்டில் இருந்த நர்ஸ் இடம்
" இது யார் குழந்தை" என்று கேட்டாள்.
குழந்தையின் முகத்தை வருடி விட்ட
நர்ஸ் " இது ஆதித்ய வர்மன் டாக்டரோட பேபி, பாவம் அவர் வைபும் இறந்துட்டாங்க " என்று கூடுதல் தகவலையும் சேர்த்து சொல்லிட்டு சென்றாள்.
பிறகு தன் தாய் வந்ததும் குழந்தைகளை எடுத்துக் கொண்டு
அவள் அண்ணை வீட்டுக்கு சென்றாள்.
அவள் தாய் " இது யாரோட பாப்பா"என்று கேட்டதற்கு
" உனக்கு கஷ்டம் என்றா சொல்லு நான் வேற எங்கேயும் போய்டுறேன் " என்றாள்.
அதற்கு பிறகு மூன்று மாதங்கள் வரை தன் தாயுடன் இருந்தவள்
ஆதியின் குழந்தையை மாத்திரம் எடுத்துக் கொண்டு கிளம்ப
அவள் தாயே " அடியேய் பெத்த பொண்ண விட்டு போறியே "என்று கத்த
" அம்மா இந்த குழந்தையை பாருமா இவளுக்கு அம்மா இல்லை செத்து போய்டா, இவளோட அப்பா கிட்ட இவள ஒப்படச்சிட்டு என் பொண்ண கூட்டி போறன் மா " என்றாள் ஷீபா
இளகிய மனம் படைத்த அவள் தாயும் " சரி போ பேத்திய நான் பார்த்துக்கறேன் " என்றாள்.
ஷீபாவும் தித்யா வை எடுத்து கொண்டு ஜகன் வீட்டுக்கு வந்து விட்டாள்.
இதை கூறி முடித்த ஷீபா " தித்யா உங்க பொண்ணு தான் " என்றாள்.
ஜகன் : " ஷீபா நீ எவ்வளவு பெரிய விசயத்தை மறச்சிருக்க தெரியுமா"
ஷீபா: " ஏன் தெரிஞ்சிருப்பி அந்த பச்சப் புள்ளயயும் கொல்றதுக்கா"
ஜகன்: " ஓவரா பேசாத ஷீபா" என்று எகிற
ஷீபா : " அடச்சி அடங்கு நீ எல்லாம் மனுசப் பிறவி தான, உனக்கு எல்லாம் நல்ல சாவே வராதுடா"
குறுக்கிட்ட ஆதி "இப்ப எங்க இருக்காங்க வீட்லயா" என்றான்.
ஷீபா ஒரு திசையை சுட்டிக் காட்ட
அங்கு ஒரு மரத்தின் கீழ் தித்யா சப்பனம் கொட்டி அமர்ந்து
அவள் தம்பியை மடியில் வைத்து அவள் கழுத்தை கட்டிக் கொண்டு இருந்தாள்.
அருகில் இருந்த ஷாலு மண்ணில் விரலினால் கோலமிட்டு கொண்டு இருந்தாள்.
அதைப் பார்க்கவே ஆதியின் கண்களுக்கு அழகோவியமாய் காட்சி அளித்தது.
ஆதி அவர்கள் அருகில் விரைந்து செல்ல
தித்யா " ஐ டார்லிங் " என்று ஒடி வந்து அவன் காலைக் கட்டிக் கொள்ள
அந்தத் குட்டிப் பையனோ " ப்பா தூக்கு " என்றபடி ஆதியின் கையை பிடித்து இழுத்தான்.
தொடரும்...,.
✍️ Muhsina saththar.
No comments