Breaking News

யாதும் நீயே... 22

 


       அவனவள்  


             ஆதியைப் பிடித்துத் தள்ளிய ஜகன் 


" உன் பொண்ணு இருந்தாலோ செத்தாலோ எனக்குத் தெரியாது" என்று அன்று நடைந்தவற்றை கூற ஆரம்பித்தான்.


       அன்று......           ஆதி  வைத்திய சாலையில் இருந்து வீட்டுக்கு வரும் வரை  

அவனைப் பின் தொடர்ந்து வந்த ஜகன்


         

       ஆதியும் அபியும் வீட்டில் இருந்து  கிளம்பி வருவதற்கு முன்பே   லாரியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.


         ஒரு சில மணி நேரத்தில்  ஆள் அரவரமற்ற சாலையில்   ஜகன்   பின்னால் வந்து கொண்டு இருந்த  ஆதியின் காரை  லாரியால்    மிக்க விசையுடன்  இடித்துத் தள்ளினான்.


         அதில் நிறை மாதமாக இருந்த அபிநயா   காரில் இருந்து தூக்கி வீசப் பட்டாள்.


       அதில்  சாலையில் உருண்டு சென்ற  அபியின்   வயிறு   ஓரத்தில் இருந்த நாட்டுக் கல்லில்   படாமல் இருக்க


       தன் கால்களை குறுக்கி   தன் வயிற்றில் வளரும் தன்னவன் உயிரைக் காத்துக் கொண்டாள் அபி.


        அதில் அவள் தலை அக் கல்லிலே மோத   அபியின் தலையில் இருந்தும்  காதுகளில் இருந்தும்  ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.


          இதை மறைவில் இருந்து பார்த்த  ஜகனும்  காயத்ரியும்


        ஆதி அவளை வந்து மடியில் தாங்குவான்  என்பதை எதிர் பார்க்க வில்லை


         ஆதி  அபியின் கன்னங்ளை பற்றிக் கொண்டு  அழுது கொண்டு இருந்தான்.


        தன்னவள் நிலையை பார்த்த ஆதியால்   தன்னைச் சுற்றி நடப்பவற்றை அறிந்து கொள்ள முடியவில்லை.


           அதில் ஜகன்   ஆதியின் பின்னால் இருந்து  தலையில் அடிக்க  ஆதியோ மயங்கிச் சரிந்தான்.


          அதைப் பார்த்த அபியின் கண்கள்   ஜகனிடம்  தன்னவனை எதுவும் செய்ய வேண்டாம் என்னும் படியாக   யாசித்துக் கொண்டது.


         அந்த மரண வலியிலும்  அபியின் கண்கள்  தன்னவனைப் பார்த்து  நீரைச் சொரிய


        ஜகனோ  அபியைப் பார்த்து குரூரமாகப் புன்னகைத்துக் கொண்டான். 


       இவர்களை  ஹாஸ்பிடலில் சேர்க்க   அபியின் உயிர் அவள் உடம்பை விட்டுப் பிரிந்து இருந்தது.


          ஆதி  ஐ சி யூ அறையில் சேர்க்கப்பட்டான்.


       அப்போது அபியை பரிசோதித்த கல்யாணி   ஜகனிடம் வந்து 


" நீங்க ஆதித்யன் பிரண்ட் தானே  , அவர் குழந்தைகளுக்கு  நாடித் துடிப்பு இருக்கு " என்றபடி


         அவனிடம் ஒரு பத்திரத்தில்  சைன் வாங்கிக் கொண்டு சென்றாள்.


     காயத்ரி  " எதுக்கு சைன் பன்ன  அந்த சனியன் இன்னும் சாகல"


ஜகன் : " வயித்துல அவன் குழந்தைங்க உயிரோட இருக்காம்


காயத்ரி : " அப்போ அவ குழந்தைங்களையும் அவள் கிட்ட அனுப்பிடலாம் "


       அப்போது அவள் குடும்பத்தினர் வந்து

ஜகனிடம்


" அவள் உடல் வாங்கி தந்தா இறுதி காரியம் பன்னிட்டு போவோம்" 

என்றனர்.


       கல்யாணியும் வந்து குழந்தைகளை ஜகன் கையில் கொடுத்து விட்டு சென்றாள்.


         அதில் ஆண் குழந்தையை  காயத்ரி  வளர்ப்பதாகக் கூறி எடுத்துக் கொண்டாள்.


      சிறிது நேரத்தில் ஜகன் ஆதியின் நன்பண் என்று கூறி

அபியின் உடலை

காயத்ரியின் குடும்பத்தினரிடம் பெற்றுக் கொடுத்தான்.


           அவர்கள் கிளம்பியதும்  ஜகனும் அந்தப் பச்சிளங் குழந்தையின் முகத்தை கூடப் பார்க்காது


" நான் என்ன பன்ன ஐ அம் சாரி ஆதி " என்றபடி


          குப்பைத் தொட்டியில் போட்டவன் அங்கிருந்து கிளம்பி சென்றான்.


         இதை ஜகன் கூறி முடிக்கவும் அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்த ஆதி


    " நீ என்ன கொலை பன்னிரூப்பி  உன் கையால சந்தோஷமா செத்துப் போயிருப்பன் , ஆனா நீ  என்ன சுத்தி இருந்த என் உயிரானவங்களை அழிச்சி என்ன ஏன் டா உயிரோட கொன்ன " 


என்று கேட்டு கண்ணீர் வடித்தான்.


         அழக் கூடாது என்று நினைத்தாலும்

இவர்கள் செய்த துரோகத்தின் வலி அவனை அறியாமலேயே அவன் கண்கள் நீரைச் சொரிந்தது.


         கண்களை அழுந்தத் துடைத்த ஆதி காயத்ரியின் பக்கம் திரும்பி 


     " நீ என் பையன கொடுமை படுத்தினாலும் அவன உயிரோட வச்சிருந்த, தேன்ங்ஸ் " என்றவன்


    ஒரு கணம் நிறுத்தி பொதுவாக " அப்போ என் பொண்ணும் செத்துட்டால்ல " என்று கேட்டான்.


             அப்போது உங்க பொண்ணு சாகல உங்களோட தான் இருக்கா என்றபடி ஷீபா அங்கு வந்தாள்.


        அதில் மூவருமே அதிர்ச்சியில் நின்றனர்.


           தொடரும்.......

    ✍️ Muhsina saththar.

No comments