Breaking News

யாதும் நீயே 21....




       அவனவள்  


         பாட்டி  தன் கண்களை பெரிதாக விரித்து உருட்டிய படி  இவர்களையே பார்த்திருந்தாள்.


      அபி சங்கடத்தில் தலையை குனிந்து கொள்ள


      ஆதியோ  தன்னவள் சங்கடத்தை  தகர்த்தெறியும் பொருட்டு  


        அவளது தோளைச் சுற்றி  கைகயை போட்ட ஆதி  


" பாட்டிம்மா   இவள் நான் கட்டிக்கப் போற பொண்ணு தான்" என்றான்.


       "அப்படியாப்பா ரொம்ப சந்தோஷம் " என்றாள் பாட்டி.


           இங்கு வார்டுக்கு  வெளியில் இருந்து இரு ஜோடிக் கண்கள்  அபியை  வட்டமிட்டுக் கொண்டிருந்ததை  ஆதி முன்னரே அறிந்திருந்தால்  தன்னவளை தக்க வைத்திருப்பானோ.


             அடுத்த இரண்டு நாட்களில்   அபிக்கு அடைக்ககளம்   கொடுத்த  பாட்டியின் முன்னால்  அபியும் ஆதியும்  திருமணம் செய்து கொண்டனர்.


          இவர்களது வாழ்க்கையும்  சந்தேஷமாகவே  சென்றது. 


       அன்று ஒரு நாள்  ஆதி தனது டியூட்டி முடித்து விட்டு வீட்டுக்கு வந்திருந்தான்.


    அபி " ஆதி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்" 


ஆதி " அபி மா  கொஞ்சம் என்ன  நிறையவே பேசலாம், என்ன சொல்லுடா" 


    " ஆதி  ஷீபாவும்  ஜகன்  அண்ணாவும் மதியம் இங்க வந்திருந்தாங்க."


ஆதி " அதுக்கு என்ன அபி மா " 


    " இல்லை ஆதி   ஜகன் அண்ணா பார்வையே சரியில்லை , ரொம்ப தப்பா இருந்துச்சு  எனக்கு  பயமா இருக்கு " என்று கூறி முடிப்பதற்குள்

        

         ஆதி  தன்னவளை  முதல் முறை  கை நீட்டி  அறைந்தான்.


      தனது நண்பணை தவறாக பேசியதற்கு

    

          தன் கருவை  வயிற்றில் சமந்து கொண்டு   ஆதியை கண்கள் கலங்கப் பார்த்திருந்தாள் அபி.

  அதை நினைத்து இன்றும் ஆதியின் கண்கள் கலங்கித் தான் போனது.


       இப்படி பட்ட ஒருத்தனுக்கு வேண்டி  தன்னவளையே  காயப் படுத்தி விட்டானே.


      "என்ன மன்னிச்சிடு அபி மா , நீ சொல்ல வந்தத நான் முழுசா கேட்றுப்பி   உன்ன இழந்து தவிக்க மாட்டேனே அபி மா            தப்பு பன்னிட்டேன்  , தப்பு பன்னிட்டேன் " என்று  தலையில் அடித்துக் கொண்டு அழுதான் அந்த ஆறடி ஆண்மகன்


   இதை சற்றுத் தள்ளி நின்று பார்த்த  ஷீபாவின் கண்களும்  கலங்கித் தான் போனது. 


  இதைப் பார்த்த  ஜகன் எந்த சலனமும் இன்றி இருக்க

காயத்ரியின் இதழ்களில் குறுநகை படிந்தது.


         இவர்கள் கொண்ட பழி வெறி மனிதத்தையே மறக்கடித்து விட்டது.


        கண்களில் கண்ணீர் வற்றும் வரை அழுத  ஆதி


           எழுந்து சென்று  ஜகனை பிடித்து இழுத்த ஆதி


     " என் பொண்ண  என்னடா பண்ண, உனக்காக என் அபியக் கூட கை நீட்டி அடிச்சேன் டா , என் பொண்ணையும் கொன்னுட்டியாடா பாவி " என்று கேட்கும் போதே அவன் கண்களில் இருந்து நீர் வடிந்தோடியது.

 

       அவனைப் பிடித்து தள்ளிய  ஜகன் "உன் பொண்ணு இருக்காளோ செத்தாலோ எனக்குத் தெரியாது " என்று சொன்னவன் அன்று நடந்ததை கூற ஆரம்பித்தான்.



               தொடரும்.....



✍️  Muhsina saththar.

No comments