Breaking News

யாதும் நீயே 20...


  


        அவனவள்  


ஆதி  காயத்ரியிடம்   திரும்பி  "  அவ உனக்கு என்ன பன்னா  அவ   உனக்கு தங்கச்சி தானே"

      காயத்ரி  :- " தங்கச்சியா ,  அவ என் தங்கச்சியா  அவ ஒரு அனாதை , என் தங்கச்சி மூனு வயசுலயே  கினத்துல விழுந்து செத்துட்டா. அவ செத்து போன கவலையில தான் என் அம்மா அந்த திக்கு வாய எடுத்து வளர்த்தா  "


ஆதி :- " அப்போ அதுக்காக தான் அவள ஒதுக்கி வச்சிங்களா "


காயத்ரி : - இல்லை அவளுக்கு ஒழுங்காக பேச முடியாது என்று தெரிஞ்ச அப்புறம் தான்"


ஆதி : - " ச்சீ நீங்க எல்லாம் மனிசங்களே கிடையாது " 


என்றவன் ஜகனிடம் திரும்பி  "யாருக்கு அவ என்னடா பன்னா" 


ஜகன் : - "உனக்காக தான் , அப்படி ஒருத்தி உனக்கு வேணாம் என்று நினச்சேன் "

         " கடைசில என் காதலே என் அபிய கொன்னுடுச்சி  " என்று

        ஆற்றங்கரையில் மண்டியிட்டு அமர்ந்து


" நான் உன்னை அன்னைக்கு பாத்திருக்கவே கூடாது அபி மா " என்று விரக்தியில் கத்திய ஆதி

           அந்த நாள் நியாபகத்திற்கு சென்றான்.

அன்று....

         ஆதி ஹாஸ்பிடலில் வார்டை ரவுன்ஸ் வர 

     அபியின் குரல் தடுப்பு மறைவில் இருந்து ஒலித்ததது.

       அது தன்னவள் குரல் என்பதை ஆதி 

        அங்கு சென்று பார்க்க தன்னவளே ஒரு பாட்டியின் சேலைன் ஏறிக் கொண்டு இருந்த  கைகளை மென்மையாக வருடிக் கொண்டிருந்தாள்.


          ஆதி  : " அபி மா "


ஒரு மாத காலத்திற்கு பிறகு   தன்னவன் குரல்  அபியின் காதுகளில் எதிரொலிக்க   


          கண்களில் மின்னல் தெறிக்க திரும்பிப் பார்த்தாள்.


      அங்கு ஆதி   தனது ஒட்டுமொத்த காதலையும் கண்களில் தேக்கிய படி இவளையே   பார்த்திருந்தான். 


           விரைந்து அவள் அருகில் சென்ற  இருக்கும் இடத்தை கூட கருத்திற் கொள்ளாது


           தன் தேடலின் தவிப்பு அடங்கும் வரையில் அவளை இருக அணைத்து  இருந்தான்.


      கட்டிலில் படுத்திருந்த பாட்டி


     "  ஏ டாக்டரே ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்குற" என்று அதட்டும் குரலில் கேட்க


       இருக்கும் இடம் உணர்ந்த ஆதி அவளை விட்டுத் தள்ளி  நின்றான்.


           பாட்டியோ தன் கண்களை பெரிதாக விரித்து உருட்டிய படி 


      இவர்களையே பார்த்திருந்தாள்.



             தொடரும்..


✍️  Muhsina saththar.

No comments