Breaking News

யாதும் நீயே 19....




        அவனவள்  


ஆதி நீர் நிறைந்த கண்களுடன் " சின்ன வயசுல இருந்தே உன்னை தானேடா ஒரு உறவா நினைச்சேன்.

      ரொம்ப வலிக்கிது டா , இத விட என்ன நீ கொன்றுக்கலாமே டா"  என்றான்.

    காயத்ரியோ "  அது எப்படி உன்னை ஒரே அடியா கொன்னா உனக்கு வலிக்காதே"

என்றாள்.

  தரையில் அமர்ந்து இருந்த ஆதி  

" என் அபி யோட மரணத்தை கூட தாங்கிட்டேன் .  இதையும் ஏத்துக்கறேன் ." என்றவன்


    எழுந்து ஜகனின் சர்ட் காலரை மூர்க்கத்தனமாக பற்றி  " எதிரிய பக்கத்தில் வச்சு இருந்தாலும் உன்னை மாதிரி நல்ல நன்பண பக்கத்தில் வச்சுக்க கூடாது, 


என் அபிய எப்படிடா கொன்ன " என்று கேட்டான்.

       ஜகனோ அமைதியாக நிற்க 

     தரையில் கை ஊன்றி எழுந்த காயத்ரி "  அவன் அந்த லாரிய கொண்டு போய் பொதுவா தான் எக்ஸிடன்ட் பன்னான் . அதுல அந்த சனியன் இறந்து போனது எங்க தப்பில்லப்பா " என்றாள்.  


     அதியோ " டேய் இந்த உலகத்துல அவ என்னடா பெருசா கண்டா?  பிறந்ததுல இருந்து எல்லாருமே. ஒதுக்கி  வச்சு அவ எதுக்குமே பெருசா ஆசப் பட்டதில்லை. 


      என் குழந்தைகள கைக்குள்ள வச்சு வழக்கனும்  அதான் என்னோட ஓரே ஆசை என்று  சொல்லிட்டு இருப்பா   அவளை போய் ஏன் டா கொன்ன " என்று கேட்டு


          அவன் கன்னத்தில் ஓங்கி அறைத்திருந்தான்.


         ஜகனோ ஆதியை தள்ளி விட்டு   

" ஆமாண்டா  ஏன் கொன்றேன் அவள பார்க்கவே அறுவருப்பா இருந்திச்சு,  அதோட இவ ஹெல்ப் பன்னா"

என்றான்.


       காயத்ரியோ மனநிலை பாதிக்கப்பட்டவள் போன்று " ஆமா நான் தான் இவனுக்கு  உதவி பன்னேன் , ஏன் னா நான் உன்னை காதலிச்சன்" என்று சத்தமாக கத்தினாள்.          

     "  வாங்கடா செல்லம் தன்னி பார்க்கலாம் "  என்று 

குழந்தைகளை ஆற்றங்கரைக்கு  அழைத்து வந்த ஷீபா

     ஜகனின் புதிய தோற்றம் கண்டு  மூன்று குழந்தைகளையும் 

     கைகளுக்குள் அனைத்தவாறு பயத்தில்  நடுங்கிப் போய் நின்றாள்.


       

            தொடரும்....

No comments