யாதும் நீயே 18...
அவனவள்
ஆதி அவளைக் கண்ட அதிர்ச்சியில் " நீயா" என்று கேட்க
" ஆமா நானே தான் , பரவாயில்லை மறந்து இருப்ப என்று நினைச்சேன் "
" நீ எல்லாம் ஒரு பொண்ணா ச்சீ அவளும் உன்னை மாதிரி ஒரு பொண்ணு தானே.
அவளைப் போய்
விபச்சாரி என்று பேஸ் புக்ல ரேட் பேசினவ தானே "
என்றான் ஆதி.
" டேய் நான் காயத்ரி டா, என்ன விட அவள் எந்த வித்துல உசந்து போனா என்று அவள கட்டிகிட்ட . அதான் பன்னேன் "
ஆதி : " உன்னை விட எல்லா விதத்திலும் என் அபி உசந்தவ தான்"
" எது அவளா தத்த த பித்த்த என்று பேசுவாளே அவளா"
என்று காயத்ரி அபிக்கு ஏளனம் செய்ய
ஒரு அடி தள்ளிப் போய் விழுந்தாள்.
ஆம் அதி அவள் ஒரு பெண் என்று கூடப் பாறாமல் கண்ணத்தில் அனைத்திருந்தான்.
" டேய் நீ எல்லாம் ஒரு மனிசனா, ஒரு பொண்ண போய் கை நீட்டி அடிக்கிற" என்று ஜகன் எகிறிக் கொண்டு வர
அவன் புறம் திரும்பிய ஆதி
" நீ இன்னும் எவ்வளவு தான் டா என் முதுகுலே குத்துவ" என்று
பிசிர் தட்டிய குரலில் கேட்க
ஜகன் : "
அது அது நான் எதுவும் பன்னலயே "
ஆதி: " த்ரீ இயர்ஸ் முன்னாடி எனக்கும் அபிக்கும் ஆக்ஸிடென்ட் நடந்தப்ப நீ எங்கே இருந்த"
ஜகன் : " ஷீபா ஊர்ல இருந்தன்"
" மறுபடி மறுபடி ஏன்டா பொய் பேசுற, ஏன்டா எனக்கு துரோகம் பன்ன, என் குழந்தை எங்கடா"
என்று ஆதி ஜகனின் சர்ட் காலரைப் பிடித்து இழுத்த படி கலங்கிய கண்களுடன் கேட்டான்.
" என்ன டா பன்ன , என்னடா பன்ன என்று கேக்குற நான் தான் உன் பொண்டாட்டிய கொலை பன்னேன் போதுமா"
என்று உரத்த குரலில் கத்தி இருந்தான் ஜகன்.
இதுவரையும் கீழே அமர்ந்த படி இவர்களது
சம்பாசனையை கேட்ட காயத்ரி
" அச்சச்சோ பாவம் " என்று உச்சுக் கொட்ட
" என்னடா சொல்ற என் அபிய நீ தான் கொன்னியா "
என்று அதிர்ச்சியில் கேட்ட ஆதி
தாங்கிக் கொள்ள முடியாத துரோகத்தின் பலனாக
" தொப் " என்று தரையில் மண்டியிட்டு அமர்ந்து விட்டான்.
நண்பனின் துரோகம் அவன் நெஞ்சை அழுத்த
ஆதியின் கண்களில் இருந்து நீர் நிறைந்தது.
தொடரும்.....
✍️ Muhsina saththar.
No comments