யாதும் நீயே 17....
அவனவள்
குழப்பமான மனநிலையில் அமர்திருந்த ஆதி
இறுதியில் " யார் சொன்னாலும் அவன சந்தேகப் படறது நான் அவனுக்கு பன்னுற துரோகம் ஆயிடும் "
என்று நினைத்தவன் தன் மகன் கண்ணனை தூக்கி கொண்டு புறப்பட்டு இருந்தான் ஹாஸ்பிடலுக்கு
தீர்க்கப் படாத சில சந்தேகங்களை
தீர்த்துக் கொள்ள வேண்டி
ஹாஸ்பிடலில்
சிசி டிவி கேமிராக்களை மோனிடரிங் செய்யும் ராகவ் இடம்
" ராகவ் ஆண்ணா இப்போ சரியா த்ரீ இயர்ஸ் முன்னால் நடந்த இன்ஸிடன்ட பார்க்க முடியுமா"
என்று ஆதி கேட்க
ராகவ் : " ம், வருசா வருசம் பதிவாகுற புட்டேஜ பென்ட்ரைவ் ல சேவ் பன்னி வைப்போம்.
ஆதி : " சரி எனக்கு த்ரீ இயர்ஸ் முன்னால் இருந்தது வேண்டும் கிடைக்குமா."
ராகவ் : " டிப்பாட் மண்ட் ல கேட்காமல் யாருக்கும் குடுக்குற இல்லை
இருந்தும் நீங்க கேட்டத சுட்டி குடுக்குறன் " என்று
பென்ட்ரைவ் ஐ ஆதியின் கையில் கொடுத்தான்.
தன் அறைக்கு வந்த ஆதி
கண்ணனை பக்கத்தில் அமர்த்தி விட்டு
லேப் டாப்பில் அதை பார்க்க ஆரம்பித்தான்.
அதில்
முதலில் பார்க்கிங் ஏரியாவில் அடிபட்டு மயக்கத்தில் இருந்த ஆதியை ஜகனே ஆம்புலன்ஸ் இருந்து இறக்குவது பதிவாகி இருந்தது.
அதைப் பார்த்த ஆதி " இன்ஸிடன்ட நடந்த அன்று ஊருக்கு போயிருந்ததா சொன்னான். இங்கே எப்படி" என்று
அவனது சந்தேகம் வலுப்பெற ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான்.
லேபர் வார்ட் முன்னாலும் ஜகன் கையில் இரூ குழந்தையை வைத்திருக்கும் காட்சி
பதிவாகி இருந்தது.
மற்ற புட்டேஜில்
மோச்சரிக்கு வெளியே அபியின் முகம் திறந்த படி இருந்த அவளது இறந்த உடலை புட்டேஜில் கண்ட
ஆதிக்கு கண்கள் தன்னை அறியாமல் கலங்க
அவனது உடலும் மனமும் முன்னரைப் போல இருகி இருந்தது.
மேலும் அந்த புட்டேஜில் அபியின் இறந்த உடலுக்கு ஜகனே சைன் வைத்து
அதை எடுத்துச் செல்வது போலவும் பதிவாகி இருந்தது.
இதைப் பார்த்த ஆதிக்கு ஜகன் மீது வைத்த நம்பிக்கை தரமட்டம் ஆகி இருந்தாலும்
மனதின் ஓரத்தில் இது பொய்யாக இருக்கக் கூடாதா என்ற நப்பாசை தோன்ற
மகனை அழைத்துக் கொண்டு ஜகனின் வீட்டுக்கு சென்றான்.
இங்கு தித்யாவுக்கும் ஷாலுவுக்கும் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள் ஷீபா.
சில நிமிடங்களில் காலிங் பெல் அடிக்க
கதவை திறந்த ஷீபாவின் முன் கையில் குழந்தை உடன் நின்றிருந்தான் ஆதி.
ஆதி: " ஜகன் இருக்கான தங்கச்சி"
ஷீபா:" முதல்ல உள்ளே வாங்க அண்ணா"
ஆதி : " இருக்கட்டும் நீ சொல்லும்மா"
ஷீபா: " சத்த நேரத்துக்கு முன்னாடி தான் கால் வந்ததா , என்ன ஏதுன்னு கூட சொல்லாமல் போய்ட்டாருண்ணா"
ஆதி : " சரி மா ஒரு இம்பார்ட்டன்ட் வர்க் இருக்கு கண்ணாவ கொஞ்சம் "
ஷீபா: " குடுங்க அண்ணா , உள்ள தான் வாண்டுங்க விளையாட்டு கிடக்கு இவனையும் சேர்த்து விட்டறன்"
குழந்தையை அவள் கையில் கொடுத்த ஆதி அவளிடம் இருந்து
விடை பெற்றுச் சென்றான்.
ஒரு மணி நேரமாக தேடிக் கொண்டு இருந்த
ஆதியின் கண்களுக்கு ஜகன்
ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தது தேரிய
காரை விட்டு இறங்கிய ஆதி
அவன் பக்கத்தில் சென்றான்.
ஜகனின் பக்கத்தில் வந்து நின்ற ஆதியைப் பார்த்ததும் பதட்டம் ஆனவள்
விலகிச் செல்ல எத்தனிக்கையில்
ஆற்றங்கரை காற்றுக்கு அவள் முகத்திரை விலகி இருந்தது.
அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்த ஆதி
" நீயா" என்று அதிர்ச்சியில் உறைந்து இருந்தான்.
தொடரும்.....
✍️ Muhsina saththar.
No comments