Breaking News

யாதும் நீயே 16..




       அவனவள் 


  வழக்கம் போல் காலையில் ஜகன் கிளம்பி ஆஃபிஸ்கு சென்றான்.

      அங்கு ஆபிஸில் வர்க்  செய்பவர்கள்   " டேய் பீல் பன்னாத மச்சி.  இப்பல்லாம் பொண்ணுங்க அப்படி தான்" என்று கூற


ஜகன் : " புரியலை" 


" அதான் ஓ பொண்டாட்டிய பத்தி தான் ஊருக்குள்ள  பேசிக்கறாங்களே "


 ஜகன் : "  ச்சீ தப்பா பேசாதீங்க, அந்த சின்ன பொண்ணு தித்யா கூப்பிடறத பார்த்து கூப்பிடுறா " 

என்று கூறிச் சென்றான்.

       மதியம் வீட்டிற்கு வந்த ஜகன் 


" ஷீபா ஷீபா" என்று வீடே அதிரும் படி கத்தினான்.


     ஷீபா " இப்ப எதுக்கு என்னோட பேர ஏழம் பொடறீங்க"என்று


       ஷாலுவை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள்.


      ஜகன்    அவள் இடுப்பில் தூக்கி வைத்திருந்த ஷாலுவை   பார்த்து 


" ரொம்ப நல்லா இருக்கு டி நீ பன்றது" என்றான்.


 ஷீபா " எது"


ஜகன்: " அதான் ஊருக்குள்ள பேசிக்கறாங்களே"


    ஷாலுவை இறக்கி விட்ட ஷீபா " ஷாலு நீ போய் தித்யா கூட விளையாடு" என்று கூறி விட்டு


           ஜகனின் புறம் திருபம்பியவள்   " ஊர் வாய்க்கு எது கிடைத்தாலும் பேசத்தான் செய்யும்.

அதுக்காக எல்லாம்

          ஒவ்வொரு வீடா கதவ தட்டி நான்  பத்தினி என்று  நீருபீக்க  சொல்றீங்களா"


   ஜகன் : " அப்படி செஞ்சா தான் என்ன" 


ஷீபா " எனக்கு புருஷனுக்காக ஊருக்காக எல்லாம் சீதைய போல நெருப்புல இறங்க முடியாது " என்று 


காட்டமாக பேச


       அவள் குரலில் உள்ள கோபத்தையும் 

பேச்சில் இருந்த நியாயத்தையும் உணர்ந்த ஜகன் அமைதியாகிப் போனான்.


              ஆதி தனது மகனை  காரில் ஏற்றிக் கொண்டு


        ஊர் முழுக்க சுற்றியவன்

        ஒரு  பூங்காவில்  தன் மகனை மடியில் தாங்கி இயற்கையை ரசித்தவாறே அமர்ந்திருந்தான் ஆதி.

   அப்போது குடும்பத்துடன் வந்த கல்யாணி


          ஆதி அங்கிருப்பதை கண்டு அவன் அருகில் சென்று அமர்ந்தார்.


         " ஹலோ ஆதித்யன் உங்க பையனா" 


ஆதி: " எஸ் மேம்"

           குழந்தையை கையில் வாங்கிய கல்யாணி 


" குட்டி பையன் கியூடா இருக்கான்" என்று


      அப்பையனின்   கன்னத்தில் முத்தம் பதித்தவர்


 " நல்ல வேளை குழந்தை பொறந்த அன்னைக்கு 


குழந்தைகள யார் கிட்ட குடுக்கனும் என்று கூட தெரியலை


       அப்ப தான் உங்க பிரன்ட் வந்தார்.


        நானும் அவர் கைல குழந்தைகள குடுத்துட்டு போய்டேன்.


         இல்லன்னா நீங்க அப்ப இருந்த சூழ்நிலையில் குழந்தைகள கூட தேடிட்டு இருக்க வந்திருக்கும்"என்று


கூறியவர்    குழந்தையை ஆதியிடம் கொடுத்து விட்டு


" சரி நான் வரேன், பசங்க தேடுவாங்க " என்று கூறி சென்றார்

         ஆதியோ " குழந்தையை ஜகன் கையில யா குடுத்தாங்க , ஏன் இந்த மூன்று வருடத்திற்கு மறைக்கனும்" என்றவாறு 


       ஜகனின் செயலை

ஜீரனிக்க முடியாமலும்  அவர் கூறியதை நம்ப முடியாத நிலையிலும் குழப்பமாக அமர்ந்திருந்தான்.


             தொடரும்.....


✍️  Muhsina saththar.

No comments