Breaking News

யாதும் நீயே 14 ...

          அவனவள்  

 அபிநயா  வீட்டை விட்டு சென்று இத்தோடு ஒரு மாத காலம் ஆயிற்று.


 அவனால் அவளை மறக்க இயல வில்லை.

 அனைவரும் அவளைக் கண்டு விலகிச் செல்ல

 அவனுக்கு  அவள்   கார் மேகம் போன்ற அழகிய  கருமை நிறத்துடனும்  சப்பியான கன்னங்களுடன்  தேவதையாகத் தானே காட்சியளித்தாள்.


 இதற்கு இடையில்  அவளைத் தேடிச் செல்ல முற்படுகையில்  


 ஜகன் தனது கல்யாண வேலைகளை சுட்டிக் காட்டி ஏதோ ஒரு விதத்தில் தடுத்துக் கொண்டு இருந்தான்.

  நேற்று தான் ஜகன் ஷீபாவின் கல்யாணமும் கோலா கலமாக இடம் பெற்று முடிந்தது. 


  இனித் தன்னவளைத் தேடிச் செல்ல  தடை இல்லை என்று நினைத்த ஆதி

ஓவர் டைம் வர்க் பார்க்க  ஹாஸ்பிடலுக்கு  கிளம்பி சென்றான்.   

  அவனின் உடலும் மனமும்  ஓய்விற்கு கெஞ்சினாலும்  

ஆழமான காதல் கொடுக்கும் வலியை தாங்கிக் கொள்ள  

இது அவனுக்குத் தேவைப் பட்டது போலும்.


ஹாஸ்பிடலில் ஆதி   ஒவ்வொரு வார்ட் ஆக ரவுன்ஸ் செல்கையில் 


 ஒரு தடுப்புக்கு மறைவில்


" பாட்டி  வலிக்கிதா, சேலைன் ஏத்தனா ஊசி போட்ட இடம் வலிக்கத்தான் செய்யும்" என்ற


 ஒரு பெண்ணின் குரல் அவன் செவிகளைத் தீண்டியது.


கொஞ்ச நாட்கள் தான் அவளுடன்  பேசி இருந்தாலும் 


 தன்னவள் குரல் அவன் ஆழ் மனதில் பதிந்ததாயிற்றே. 


      அது தன்னவள் குரல் தான் என்பதை உணர்ந்து கொண்டான் அந்தக் காதல் தீவிரவாதி.


     " டாடி கதவ திற" என்ற தித்யாவின் குரலில்  


     ஜகனின் நினைவலைகள் அறுந்து விழ


       கதவை திறந்த ஜகனின்  கைகளை பிடித்து கட்டிலில் அமர்த்திய  தித்யா 

" டாடி நேத்து  டார்லிங் குட்டி பையன்  எவ்வளவு கியூடா இருந்தான் தெரியுமா"


          என்று கதை பேச ஆரம்பிக்க 


         தித்யாவின் பேச்சிலும் , முகத்திலும் சரி


 அவனுக்கு ஆதியின் சாயல் எழுவதைத் தடுக்க முடியவில்லை.


            இருந்தும் எதையும் யோசிக்கும் திறானி அற்று ஆஃபிஸ்கு   கிளம்பிச் சென்றான்.


 இங்கு கிராமப் புறத்தில்  மூன்று வயதுக் குழந்தை 

" பாட்டி அம்மா பார்க்கனும் " என்று

அழுது கொண்டு இருந்தது.


  அந்த  வயது முதிர்ந்த பெண்ணும் 

அதன் தாயிற்கு அழைத்தாள்


        போனை அட்டண் செய்த  ஷீபா " சொல்லுங்க ம்மா"


" ஓ பொண்ணு அழூறா டி, எப்ப வந்து பார்க்க போற, வந்து பார்த்து ஒரு வாரம் ஆச்சு நினைப்பு இருக்கா "


       ஷீபா ஒரு முடிவு எடுத்தவளாய் " ம்மா  அவளை என் கூட வச்சிக்குறேன். இனி மேலும் மறைஞ்சி வாழ முடியாது" என்று

வைத்து விட்டாள்.


         அந்த  வயது முதிர்ந்த பெண்  " அடியேய் ஷாலு இனி உன் அம்மா ஓட இருக்கலாம் நாளைக்கே போலாம் "என்று கூற


         அந்த வாண்டும் அழுகை மறந்து புன்னகைத்துக் கொண்டது.


      ஒரு  மறைவான இடத்தில் நின்ற  ஜகனோ தனக்கு எதிரே நின்றிருப்பவரை பார்த்து


" இப்ப எதுக்கு வர சொன்னீங்க "என்று கேட்க


      " அவன் பொண்ணு எங்க இருக்கா எனக்கு தெரியனும் "


        ஜகன " இனியும் என்னால முடியாது "


       என்பதைக் கேட்டவர்  " என்னால் ஒத்துக்க முடியாது " என்று  

கோபத்தில் தலையை இரு பக்கமும் ஆட்ட


 அவர் முழங் காலை தொட்டுக் கொண்டிருந்தது கார் கூந்தள்

  ஆம் அவர் 

அவனல்ல   அவள்     

           தொடரும்....


✍️  Muhsina saththar


No comments