யாதும் நீயே 13..
அவனவள்
ஜகனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த ஷீபா
" அபிக்கு அப்புறம் என்னாச்சு" என்று கேட்க
சாப்பிட உணவுத் தட்டை தூக்கி சுவற்றில் அடித்த ஜகன்
அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.
பீரோவில் இருந்து , ஆதியும் அவனும் சிறு வயதில் இருந்து
ஒன்றாக இருந்த புகைப்படங்களைப் பார்த்த ஜகன்
உள்ளம் குற்ற உணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்தது.
நேற்று அவ் உருவம் " நீ ஓரு மித்ர துரோகி" என்று சொன்னதும் தான்
அவன் ஆதிக்கு செய்த பாதகம் புத்தியில் உறைத்தது.
அதில் ஜகனின் கண்கள் கலங்க
அவன் நினைவுகளோ அன்றைய தினத்தை நோக்கிச் சென்றது.
அன்று....
ஆதி ஹஸ்பிடலில் தன்னவளுக்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான்.
ஜகனோ " இவளுக்கு போய் எல்லாம் எப்படி முக்கியத்துவம் கொடுக்குறான் பாரு"என்று
நினைத்து முகம் சுழித்துக் கொண்டான்.
இருந்தும் தன்னை காட்டிக் கொள்ளாமல்
அவளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த ஆதியிடம் சென்று
" டேய் மச்சி அப்பிடி கொஞ்சம் வாடா" என்க
ஆதி : " அபி மா சாப்பிட்டதுக்கு அப்புறம் வாரேன்"
அபி : " போய்டு வாங்க" என்று சொல்ல
அவனும் கைகளை சின்கில் கழுவிக் கொண்டு
ஜகனை அழைத்து சென்றவன்
" இப்போ சொல்லு" என்றான்.
ஜகன் " டேய் நீ பைத்தியமா இப்படி ஒருத்திய லவ் பன்ற
ஆதி : " அவளுக்கு என்ன குறை அமுல் பேபி மாதிரி சப்பியா கியூட் டா இருக்கா "
ஜகன்: " அவளா " என்று நக்கலாக கேட்க
கோபத்தில் ஜகனின் கழுத்தைப் பற்றியவன்
" குறை அவள் கிட்ட இல்லை , உன்னோட பார்வையில் இருக்கு
இனி அவளைப் பற்றி தப்பா ஏதும் சொன்ன
நண்பன்டு கூட பார்க்க மாட்டான் " என்று
எச்சரித்து விட்டு சென்றான்.
இதை மறைந்து இருந்த பார்த்த " அவள் இப்படி சரி நல்லா இருக்கட்டும் " என்று அவளது மனம் குளிர்ந்து போனது.
இரு நாட்கள் ஹாஸ்பிடல் வாசம் முடித்து கொண்டு
அபியை தனது வீட்டின் அருகே தங்க வைத்துக் கொண்டான் ஆதி.
இவ்வாறு சில நாட்கள் கழிய அன்று
அபி தங்கியிருந்த வீட்டினுல் தடாலடியாக நுழைந்தான்
ஜகன்
அபி : " வாங்கன்னா"
ஜகன் : " நான் உனக்கு அண்ணணா,
சரி, அத விடு உனக்கும் அவனுக்கும் கொஞ்சமாவது பொருத்தம் இருக்கா.
சரி என்ன படிச்சிறுக்க"
என்று கேட்க
" பிளஸ் டூ வரைக்கும் " என்று கூறினாள் அபி
ஜகன்" சரி நீயே வெளியே போய்டு , எப்படி சரி வாழ்ந்துக்க " என்று கூற
அபியோ " நான் இது வரைக்கும் அவர் கூட வாழ நினைக்கல
என்னோட தகுதி எனக்கு தெரியும்."
ஜகன் : " அப்புறம் என்ன "
அபி: " நம்பி வீடேடுத்து தங்க வச்சிறுக்காறு அவர் ட சொல்லிட்டு போறேன் "
ஜகனோ அவள் பையை எடுத்து முகத்தில் விட்டெறிந்தவன்
அவளைத் தெருவில் தள்ள
நகர் புறம் ஆகையால் பார்ப்பவர்கள் " நமக்கு எதுக்கு வம்பு " என்று அவளைக் கடந்து சென்றனர்.
அபிக்கு எப்போதும் அள்ளல் பட்டுக் கொண்டிருப்பதை நினைத்து கண்ணீர் பெருக்கேடுக்க
எங்கு செல்வது என்று அறியாமல் கால் போன திசைக்கு நடந்து சென்றாள்
தொடரும்..
✍️ Muhsina saththar
No comments