Breaking News

யாதும் நீயே 12...

 


       அவனவள்  


 மாலை நேரத்தில்   அந்தக் குழந்தையை  வீட்டிற்கு   அழைத்து  வந்த  ஆதி


தனது சந்தோஷத்தை  பகிர்ந்து கொள்ள   ஜகனுக்கு அழைத்தான்.


அங்கு    ஆதியோ   ஒருவர் முன்  பனிவாக   கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.


ஜகன் : " அவன் குழந்தைய கண்டு பிடிச்சா  என்ன, அதான்   நீங்க ஆசப் பட்ட  மாதிரி   அவன் சந்தோஷத்தை   அழிச்சிட்டீங்க தானே"


அவரோ " அது மட்டும் அவனுக்கு போதாது .

அவன் அவள மறக்க முடியாம  தனி மரமா   வெந்து   சாகனும்" என்று  வன்மமாய் மொழிய


          ஜகனின்  போன் தனது இருப்பை உணர்த்தியது.


அவர்: " ஃபோன்ல  யாரு


" அவன் தான் "  என்ற 

ஜகன்   போனை அட்டன் செய்ய


" டேய் மச்சி என் குழந்தை உயிரோட இருக்கான் டா , என் கைக் குள்ள     இருக்கான் டா , நான் டுடே   ரொம்ப சந்தோஷமா  இருக்கேன் " என்ற

ஆதியின்   ஊற்சாகக்   குரலே   அவனை வர வேற்க


           அடுத்த நொடி   போன் சுவற்றில் மோதி   சில்லு சில்லாக   உடைந்து   சிதறியது .


           அதில் கோபமடைந்த   ஜகன்  எதிரில்   இருப்பவரைப்  பார்த்து  " அதான்  அபிய ஆக்ஸிடென்ட் ல போட்டாச்சு தானே ,  இனி என்ன தான் வேனும்" என்று கத்த


      அவரோ கூலாக அவனைப் பார்த்து " நீ என்ன உத்தமனா,  காசுக்காக தானே  அவன் பின்னந்  தலைல அடிச்ச,   அவன் பொண்டாட்டி இறுதி சடங்க கூட  பன்ன விடாமல் செஞ்ச   நீ ஒரு மித்ர துரோகி " என்று கூற


        ஜகனோ   சிலையாக சமைந்து  நின்றான்.


     ( எப்போதுமே  கண்ணுக்குத் தெரியாத  எதிரிங்கள விட  கூட இருக்குறவங்க தான் முதுகுல குத்துவானுங்க)  


     

           இரவு எட்டு மணிக்கு   என்றும் போல் இன்றும்  ஷீபா தித்யாவை  ஆதியின்  வீட்டுக்கு அழைத்து வந்தாள்.


          ஆதி குழந்தைக்கு " கண்ணா வாய திற " என்று உணவு ஊட்ட


    தித்யாவோ   டைனிங் டேபிளில் ஏறி அமர்ந்து

ஆதியின்  தலையில் தட்டி  " டார்லிங் உணக்கு ஒன்னுமே தெரியல " என்று உணவுத் தட்டை வாங்கி   ஆதிக்கும் அவனுக்குமாக  மாறி மாறி ஊட்டி விட்டாள்.


    ஷீபாவோ " அப்படியே  அபிய  உரிச்சு  வச்சிறுக்கா " என்று  நினைத்து கொள்ள


      ஆதிக்கு என்றும் போல் இன்றும் தன்னவள் நினைவுகளில் கண்கள் கலங்கித் தான்  போனது.


( நடந்து முடிந்தவற்றை எவராலும் மாற்ற முடியாது. அவன் வாழ்க்கை முழுவதும் அவளது   நினைவுகளில் வாழ்ந்தாக வேண்டும் என்பது விதி.  எந்த ஒரு ஆண் மகனின் உண்மைக் காதல்  

இளகுவில் மறைந்து போகக் கூடிய ஒன்றல்ல)

அடுத்த நாள் காலை கதிரவனவன் தன் கடமையை சரி வர நிறைவேற்ற

       கண்விழித்த ஆதியின் கண்களில் 

அவன் மீது கால் கைகளை பரப்பிக் கொண்டு  அவன் வெற்று மார்பில் தலை சாய்த்து உறங்கும்  மழலையே 

தென் பட்டது.

      இதுவரை காலமும்  தன்னவள் தலை சாய்த்து உறங்கிய தன் மார்பில் 

      இன்று  அவள் மூலம் உதிர்த்த உயிர் பூக்குவியலாக  படுத்திருப்பதை பார்த்து


        நெடிய மூன்று வருடங்களின் பின் அவனது வதனங்களோ விரிந்த புன்னகையை தத்தெடுத்துக் கொண்டது.


                தொடரும்....



✍️  Muhsina saththar.

No comments