கண்டு கொண்டேன் காதலை 01
காதல்
சென்னை மாநகரத்தில் அந்தக் கல்யாண மண்டபமே
உறவினர்களால் நிறைந்து ஒரு திருவிழா போல் காட்சி அளித்தது.
அந்தத் திருமண விழாவின் நாயகனோ
மண மகன் அறையில் உச்ச கோபத்தில் அமர்ந்திருந்தான்.
வளர்ந்து வரும் இளம் தொழிலதிபன்.
மாநிறம், அலை அலையான கேசம், உடற் பயிற்சியால் முறுக்கேறிய உடம்புடன் ஆறடி ஆண் மகனாக தளபதி விஜய் போல் காட்சி அளித்தான்.
இங்கு ஹோம குண்டத்திற்கு எதிரில் இருந்த அய்யர் வெற்றிலையை வாயில் போட்டவாறே
" மாப்பிள்ளை அம்பிய அழச்சிட்டு வாங்கோ" என்று குரல் கொடுக்க
ராஜலிங்கமோ சுற்றி முற்றிப் பார்த்து விட்டு " டேய் மாட்டுப் பயலே இங்க வாடா " என்று அழைக்க
பக்கத்தில் சென்ற அருண்" என்ன அங்கில் பொசுக்குனு இப்படி கூப்பிட்டீங்க " என்று கேட்க
" மச மசன்னு நிக்காம அவனப் போய் கூட்டி வா " என்று கூறியவர் நைசாக கலண்டு கொண்டார்.
"ஏன் இவருக்கு போனா என்னவாம்" என்று முனுமுனுத்த அருண்
மண மகன் அறைக்கு முன்னால் நின்று
" டேய் என்னடா பண்ற இவ்வளவு நேரம்" என்று கதவைத் தட்டிக் கொண்டு இருந்தான் .
" டமார் "என்ற சத்தத்துடன் கதவை திறந்தவன்
" இப்ப உனக்கு என்னடா வேணும்.
ஓடி எல்லாம் போக மாட்டேன் மூடிட்டு போ" என்று சீற
" அங்க போனா அவர் அடிக்கிறார். இங்க வந்தா இவன் உதைக்கிறான் "என்று மனதிற்குள் புலம்பிய அருண்
" மாப்பிள்ளையை அழச்சி வர சொன்னாங்கடா" என்று கூறினான்.
இறுகிய முகத்துடன் " முன்னால் போ வாரேன்" என்று கூற
" சீக்கிரம் வந்து தொலைடா" என்று கூறிச் சென்று விட்டான் அருண்.
சற்று நேரத்தில்
தனது தந்தை ராஜலிங்கத்தை முறைத்துப் பார்த்தவாறே
மண மேடைக்குச் சென்று ஹோம குண்டத்திற்கு முன்னால் அமர்ந்தான்.
ஹோம குண்டத்தில் இருந்து வெளிப்பட்ட புகை வேறு எரிச்சலை கிளம்ப எரிச்சலுடன் அமர்ந்து இருந்தான் அவன் ருத்ரேஷ்
ருத்ரேஷ் இராணி
தொடரும்......
✒️ Muhsina saththar.
No comments