இன்று சர்வதேச இடதுகையாளர் தினம் ....
ஆண்டு தோறும் ஆகஸ்ட் 13ம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச இடது கையாளர் தினம் . உலகில் கொண்டாடப்படும் விஷேட தினங்களுக்குள் இதுவும் ஒன்றாகும் .
அனைவருக்கும் வாழ்த்துகள் .
இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் சமூக அந்தஸ்தில் குறைந்தவர்கள் அல்ல.
இடது கைப்பழக்கமானது உடலின் குறைபாடும் அல்ல! உடல்ஊனமும் அல்ல .
இந்த உலகில் வாழ்பவர்களுள் நாற்பது சதவீதமானவர்கள் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் திறமை மிக்கவர்கள், பெருமை பெற்றவர்கள், உயர் பதவிகள் வகிப்பவர்கள் இப்படி நம்மில் பலர் இருக்கின்றனர்.
உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்க நாட்டின் அதிபர்களான ஜோர்ஜ் புஷ், ரொனல்ட் ரேகன், பில் கிளின்டன், பிரபல கிரிக்கெட் வீரர்களாக விளங்கிய எலன் போடர், வஸீம் அக்ரம், சனத் ஜயசூரிய, புகழ்பெற்ற ஓவியர்களான மைக்கல் அஞ்சலோ, பப்லோ பிக்காசோ, லியனாடோ டாவின்ஸி, இங்கிலாந்து அரச பரம்பரையைச் சேர்ந்த இரண்டாவது எலிசபெத் மகாராணி, இளவரசர்களான சார்ள்ஸ், வில்லியம், கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ட்ரோ, சாரணியத் தந்தை பேர்டன் பவல் பிரபு, உதைபந்தாட்ட வீரர் மரடோனா, நடிகர் சார்ளி சப்ளின், நடிகை மர்லின் மன்றோ மட்டுமன்றி உலகையே ஒரு திரும்புத்திருப்பிய நெப்போலியன் பொனபார்ட், ஜுலியஸ் சீசர், மகா அலெக்சாண்டர் போன்றவர்களெல்லாம் இடது கைக்காரர்கள் என்றால் ஆச்சரியமாக இல்லையா?
எத்துறையை எடுத்துக் கொண்டாலும் அங்கே இடது கைப் பழக்கமுள்ளவர்களின் கையே ஓங்கியிருப்பதை நாம் காண முடிகிறது.
இடது கைப்பழக்கம் ஒருவிஷேட திறமை என்றுதான் சொல்ல வேண்டும் .
வலது கை பழக்கம் கொண்டவர்களை விடவும் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் உரிய பணிகளை விரைவில் நிறைவேற்றுவதை நாம் அவதானிக்க முடியும்.
வீட்டிலும் சரி பாடசாலையிலும் சரி இடதுகைப் பழக்கமுள்ளவர்களை ஏளனமாகப் பார்க்காதீர்கள் . அவர்களை அவமானப் படுத்தாதீர்கள் . இது ஒரு குறையே அல்ல .
. இப் பழக்கமானது மனித உடலின் இயைபாக்கத்துடன் இணைந்த ஒரு செயற்பாடு. இது உருவாகிய பழக்கமே அன்றி உருவாக்கப்பட்ட அல்லது நிர்ப்பந்திக்கப்பட்ட ஒன்றல்ல.
மனிதன் மட்டுமன்றி மிருகங்கள் பறவைகள் கூட இடதுகைப்பழக்கமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது .
ஒரு குழந்தையிடம் ஏதாவது ஒரு பொருளையோ அல்லது உணவுப் பண்டத்தையோ கொடுக்கும் போது அல்லது எதையாவது வாயுள் திணிக்க முற்படும் போது எந்தக் கையைப் பயன்படுத்துகிறது என்பதை அவதானித்து எதிர்காலத்தில் அக் குழந்தை எந்தக் கை வழக்கம் கொண்டதாக வளரும் என்பதை எம்மால் உறுதியாக ஊகிக்க முடியும். தானாகவே தன்னை அறியாமலேயே இப்பழக்கம் ஏற்படுகிறது என்பது இந்த இயல்பு மூலம் புலனாகிறது.
ஆகவே நிர்ப்பந் தத்தினாலோ, பயமுறுத்தலினாலோ இதனை மாற்ற முடியாது.
இடது கைப் பழக்கம் என்பது பிறவியிலிருந்தே உருவாகும் ஒரு வழக்கமல்ல என்பதும் சூழ் நிலைகளும் சுற்றுப்புறச் சூழலும் இதற்குக் காரணமாகிறது என்பதும் நவீனகால விஞ்ஞானிகள் கூற்றாகும். இடது கையாளர்களைக் கருத்தில் கொண்டு நவீன உற்பத்திகளும் இன்று சந்தைகளில் மலிந்துள்ளன.
தொலைபேசி, தட்டெழுத்து இயந்திரம் போன்ற அன்றாட தொழில் நுட்ப உற்பத்திகள் உட்பட அவர்களின் பாவனைக்கு உதவும் அத்தனை பொருட் களும் வித்தியாசமான வடிவமைப்பில் உருவாகிய வண்ணம் உள்ளன.
எனவே இடது கையாளர்களை நாம் இம்சிக்க முடியாது. அவர்களுக்கு அது தனி உரிமை. அதனைத் தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. இடது கைகளால் உடலைப் பிளந்து உயிரைக் காக்கும் வைத்திய நிபுணர்களை நாம் காண்கிறோம். இடது கைகளினால் தீர்ப்பை எழுதி மரண தண்டனையோ அல்லது விடுதலையோ பெற்றுக் கொடுக்கும் நீதிபதிகளையும் நம்மால் காண முடிகிறது.
இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் சமூக அந்தஸ்தில் குறைந்தவர்கள் அல்ல. அத்தோடு இது ஒரு குறைபாடோ, இயலாமையோ அல்ல. இது உயிரினங்களின் தனித்துவ உரிமை. இதற்கு வேலியிட அல்லது அணை போடும் உரிமை எவருக்கும் இல்லை என்ற முடிவு இங்கு எட்டப்பட்டது.
இடது கையால் எழுதினாலும், பிடித்தாலும், எடுத்தாலும் அவர்களும் மனிதர்களே!
இடதுகை என்றால் என்ன? வலது கை என்றால் தான் என்ன? நாம் நமது கைகளின் மீது நம்பிக்கை வைத் தால் மட்டுமே நடப்பவை எல்லாம் நல்லவையாக நடக்கும
திருமதி சுஹைதா ஏ கரீம் .
13.08.2023
No comments