அகிலம்
அசைந்தாடி அவதி பெற
என்னுள்ளம் மட்டும்
உணர்வின்றி ஜடமாய் ...
பட்டாம்பூச்சி
பரவச சல்லாபத்தில்
சிரித்துக்கொண்டே
என்னை நோக்கி
ஒரு கேலி சித்திரத்தில்...
தூரத்தே மின்னிய
தலைக்கவசம் கூட
தன்னில் தேடிய
துணையோடு நிற்கையில்
காவியமெய்வதில்
காதல் கொண்ட
கண்ணகி மாத்திரம்
காதல் கோவலன்
இன்றி காய்வதேன்....!
காவிய கண்ணகி
No comments