வா தோழி...
கூட்டம் கூடி மகிழ்வை நாடி
எட்டா தூரத்தை எட்ட முனைய அங்குமிங்கும் ஓடி
பட்டம் விடும் விழுதுகளை பார்க்கலாம் தோழி வாடி
திட்டமிட்டு நாமும்
பட்டமிட்டு மகிழ்ந்தோமடி பாடசாலையிலொரு நாள்...
நோட்டமிட்டு எமை பார்த்து பார்த்து இரசித்த கண்கள்
சட்டம் போட்டு நாமும் வீட்டில் பட்டம் செய்தோமடி தோழி
இன்று பட்டம் விட்டு எட்டா தூரத்தை பட்டத்தால் எட்டிப் பிடிக்கும் போது
சிறகு விரித்து இந்த பட்டத்தை போல் உயர்ந்து செல்ல நினைக்கையில்
என்றும் நீர் நம்பிகையுடன் முயன்று போகையில்
உமக்கு பட்டம் தந்து வாழ்வை அழகுபடுத்துவார்கள்
என்று வானத்தை அலங்கரிக்கும் நாளைய தலைவர்களுக்கு
மொழிவோம் வா தோழி
Azha Lafir
No comments