என் காதல் அவ்வளவு தான்...!
இங்க எல்லா விஷயமும் எல்லா நேரத்துலயும் அழகா தெரியுறல அதுக்கான ஒரு நேரம் வரும் அப்போ அது வழமையான அழகை விட இரட்டிப்பு அழகா தெரியும் தேய் பிறை முழு வண்ணம் ஆகிறதப் போல..
மழையை வழியனுப்பி வைக்கிற வானவில்லை போல..! இப்பிடி எல்லாமே அதுக்கான நேரத்துல தான் தன்னை அழகாய் காட்டிட முயலும்...!
அது போல தான் சில நேரங்களில் என் காதலும் அது ரொம்பவே அழகானது தனித்துவமானது..!
நான் காதலென சொல்வது உன்னைத்தான் ..!
சில பொழுதுகளில் என் செய்கைகள் உன்னை காயப்படுத்தி இருக்கலாம். ஆனால் எந்நிலையிலும் உன்னுடனான என் உடனிருப்பை உதறிக்கொள்ள நான் முயன்றதில்லை...!
பலமுறை உன்னிடத்தில் மட்டும் தோற்றதுண்டு அதுதான் பிடிக்கிறது வாதிட்டு உன்னை வதைக்க விருப்பம் இல்லை உன் சின்னச் சினுங்கல் கூட சந்தோசத்தின் வெளிப்பாடாய் மட்டுமே இருக்க வேண்டும்...!
என்னால் நீ கொண்டாடித் தீர்க்கப்பட வேண்டும் என்பதே என் காதல் நியதி ஆனது..!
No comments