பரந்த உலகமதில் விரிந்த உள்ளமதில் ..
கலந்த இரு ஒருமித்த உணர்வுகளின் சேர்க்கை நட்பென இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கும் இம் மாயவுலகில்...
தொடரும் மானிட வாழ்க்கை பயணத்தின் இடை நடுவே ஒவ்வொருவரும் சந்திக்க நேரிடும் ஓர் உன்னத உறவு நண்பர்களென யாமறிந்திருப்பினும் நண்பனெனும் அவ் உறவின் உணர்வை மதிப்பவர்களாய் என்றும் யாமிருப்போமா??...
மனிதா !!!
உணர்ந்து கொள் உணர்வோடு உயிர் வாழும் நட்பே உலகாலும் என்பதை!!!
நாற்றிசைகளிலும் நம்மை மிஞ்சும் நட்பு வட்டாரங்களிலும் நம்மில் நன்மதிப்புப் பெற்றோரே நண்பர்களாய் நாளாந்தம் நம்மை நாடி வருகின்றனர் என்பதை யாமறிந்திருந்தாலும் நாடி வருவோரெல்லாம் நம்மவர்களாய் நாள்தோறும் நம்முடன் இருப்பார்களா?? ....
மனிதா !!!
உணர்ந்து கொள் நிஜத்தோடு நினைவாகும் நட்பே உயிர் வாழும் என்பதை....
நண்பர்களை அடைவதை வாழ்க்கை சுலபமாக்கும் தருணங்களில் நண்பர்களை தெளிவதில் கண்ணாய் இரு மனிதா ...
மனிதா உணர்ந்து கொள் காண்பவை எல்லாம் ஏற்றவை அல்ல என்பதை!!!
நண்பர்களெல்லாம் நல்லவர்களுமல்லர் நல்லவர்கள் எல்லாம் நண்பர்களை மிஞ்சுபவர்களுமல்லர் ....
மனிதா!!
உணர்ந்து கொள் நல்லதை கொண்டு நல்வழிப்படுத்தப்படும் நட்பே பின்னாளில் உறவாகும் என்பதை!!!
நண்பர்களிலும் பல்வகையினர் நம்மில் வலம் வரினும் நட்பில் நன்மதிப்பை பெற்றோர் வெகு சிலரென்பது நியதியடா ...
அச் சிலரிலும் ஒரு சிலரின் நட்பானது எளிமையான வாழ்வை போன்றதாகும் ஏனெனில் அந் நட்பில் சில விடயங்கள் எல்லைப்படுத்தப்பட்டிருப்பினும் நிம்மதி நிறையாய் இருக்கும்!!!
இவ்வழி இன்னோர் சாராரின் நட்பென்பது ஆடம்பர வாழ்வைப் போன்றதாகும் ஏனெனில் அந் நட்பில் சில விடயங்கள் நிறையாய் இருந்தாலும் அந் நட்பில் நிம்மதி நிறைவடைவதில்லை என்பதல்லவா நிதர்சனம்???....
மனிதா உணர்ந்து கொள்!!
ஆடம்பத்தை விரும்பி எளிமையை துரத்தி விடாதே துரத்திய பின் தேடப்படுவதெல்லாம் தொலை தூரம் தொலைந்த பின் எங்கணம் அதை மீட்கப் போகிறாய் ??.....
மானிடா உணர்ந்துகொள் மறுக்கபட்டவைகளே ஒரு நாள் எம்மில் தேடலாகும் என்பதை!!!
✍ :கவித்தாயின் கவித்தோழமைகள்...
பேருவளை.
No comments