Breaking News

இரவு நேரத்தூக்கம் தொலைத்தவரா நீங்கள்? - இனி பயங்கரம்


 

  உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் , மீண்டும் புத்துணர்வோடு செயற்படுவதற்கு மூளைத் தன்னைத்தானே  புதுப்பித்துக் கொள்ளும். இதற்கு ஓர் இயற்கை வழி இரவுநேரத்தூக்கம்.

பொதுவாக ஒருவருக்கு ஒரு நாளொன்றுக்கு 6-8 மணி நேர இரவு நேர தூக்கம் அவசியம். தூக்கம் குறையும் போது உடல் நலமும் உள நலமும் பாதிப்படைகின்றன. இளவயதில் தூக்கம் இன்மையால் நாற்பது வயதில் ஞாபகமறதி வந்து விடுகின்றது. தேவையில்லாமல் கோபம், எதிர் படும் அனைவரிடமும் எரிந்து விழல் மற்றும் உடல்உஷ்ணம் போன்ற நம் உடல் மற்றும் உள நல நிலைமையை மாற்றி விடுகிறது. 

 ஒருவருக்கு தொடர்ந்து தூக்கம் கெடும் போது பசி குறையும், அஜீரணம் தலைகாட்டும், உணவின் அளவு குறையும், உடல் எடை குறையும் பணியில் ஆர்வம் குறையும், பகல் முழுவதும் தூக்க களைப்பில் இருப்பர்.இவ்வாறான ஆரம்ப அறிகுறிகள் பயங்கர நோய் நிலைமைகளுக்கே .....

     மாதக்கணக்கில் தூக்கம் இன்மையால் 

 

  1.உயர்குருதி அமுக்கம்( High pressure) 


 2.நீரிழிவு (Diabetes)

   3.பக்கவாதம்( Paralysis)


 4.மாரடைப்பு (Heart attack)


  போன்ற பயங்கர நோய் நிலைமைகள் தோன்றுகின்றன. எனவே, இனி வரும் காலம் இரவில் நிம்மதியாக தூங்க முயற்சிப்போம்.ஆரோக்கியமான இளம்சமுதாயத்தினராக உருவெடுப்போம்.

No comments