Breaking News

இரண்டல்ல ஒன்று ....

 


அன்பைக் கேட்டேன் உன்னைத் தந்தாய்...

உறவைக் கேட்டேன் உயிரைத் தந்தாய்..

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றேன்..

ஒன்றும் ஒன்றும் ஒன்றே என்றாய்..


கைகோர்த்து உலா வர ஆசைப்பட்டேன்..

 கரம் பிடித்து வாழ்க்கை தந்தாய்..

 தலையணை கேட்டேன்

 உன் மடியையே மெத்தை ஆக்கினாய்!!


 வெயிலுக்கு குடைத் தேடினேன்

 நீயே நிழலானாய்!!

 போர்வைக் கேட்டேன் உன்னையே ஆடை ஆக்கினாய்!!


 கண்ணுக்கு குளுமைக் கேட்டேன்..

 நீயே காட்சியாகினாய்!!

 கனவில் தினம் உன் தரிசனம் வேண்டும் என்றேன்..

 நனவில் உன் அருகாமையை

 தினம் தந்தாய்


 புதிய தென்றல்

  றிஸ்வானா ஜெ...

No comments