Breaking News

புரியாத புதிர்...

 


அச்சம் உறைந்த

இரட்டை விழிகளுக்குள்

 புரியாததில் புதிர்

தேடிய பயணம் 


சுவர்கள் சுற்றிய சுடர் சதுப்பினிலே 

சுழலும் பூமியை

சுற்றும் ஆசையோ !


பெண்ணாய் பிறந்ததில்

தானோ இன்று! 

பாகையில் சிறைந்தவள்

ஆனாளோ என்று!


 சிறகறுந்த சிட்டுக்குருவியாய்

சிறைபடர்ந்த இவ்வாழ்க்கை

 மங்கை சிந்திய

 கண்ணீர் மாயவலைகளுக்குள்ளே!


இதழ்கள் உரைத்த

இன்னல் கடந்து

மின்னல் வரைந்த

வண்ணம் போல் 


சிரசம் தேடிய

பெண்மையின் பேராசையி்ல் 

காகித கொலையிலின்று

காவிய கண்ணகியாய்!



காவிய கண்ணகி

No comments