தந்தையின் வாக்கு ..
என் மகளே
ஆசைகள் இருந்ததில்லை
ஆடம்பரம் வேண்டியதில்லை
ஆக்ரோஷப்பட்டதில்லை
அதிக ஆனந்தமும் கண்டதில்லை
உன் தாய்
உன்னைக் கையில் ஏந்திய பிறகே
அதிகம் உழைக்க ஆரம்பித்தேன்
என் தங்கத்திற்குத் தங்கத்தை
அணிவித்திட
அடிக்கடி ஆக்ரோஷப்படுவதையும்
நிறுத்திக் கொண்டேன் உன் புன்னகை கண்டு
உன் தாயவள் கேட்டதை மறந்த
சந்தர்ப்பமும் உண்டு
ஆனால் நீ கேட்கும் முன்னே
அத்தனையையும்
வாங்கித்தந்துவிட நினைத்தேன்
உன் தாயின் மறு கேள்விக்குச்
சலித்துப் பேசிய நானோ
உன் அடுக்கடுக்கானக் கேள்விக்கு
அன்பாய் பதிலளித்தேன்
இருப்பினும் அத்தனையிலும்
புன்னகை பூத்து
என்னை முழுவதுமாய் ஏற்று
எம் இருவரின் சந்தோசமே
அவள் சந்தோசம் என்று ஓரமாய் நிற்கின்றாளே உன் தாயவள்
அவள் பொறுமையை
மறவாது கேட்டு
வாங்கிச் செல் என் மகளே...
✍🏻 ஷபானா ஆதம்லெப்பை
(ஓட்டமாவடி)
No comments