கன நேரம் துயில்ந்து கொள்கிறேன்..
கன நேரம் துயில்ந்து கொள்கிறேன்
இல்லையேல் இரவு முழுக்க
முழித்தும் கொள்கிறேன்
விரும்பினால் பேசுகின்றேன்
இல்லையேல் புன்னகையோடு
விடை பெறுகின்றேன்
கொட்டும் மழையில் நனைகின்றேன் இல்லையேல் போர்வைக்குள்
சுருண்டு கொள்கின்றேன்
என் பூனையோடு விளையாடுகின்றேன் இல்லையேல் இயற்கையோடு
இணைந்து கொள்கிறேன்
கடலில் கால் நனைக்கின்றேன்
இல்லையேல் கரையில் அமர்ந்து கொள்கின்றேன்
பேரூந்தின் ஜன்னல் ஆசனத்தில்
இருந்து ஓர் புத்தகத்தை வாசிக்கின்றேன் இல்லையேல் எதையோ ஆழமாகச் சிந்திக்கின்றேன்
விரும்பிய போது ஆன்லைன் வருகின்றேன் இல்லையேல் ஓர் கவிதையைக் கிறுக்க ஆரம்பிக்கின்றேன்
கவலையை என் தலையணையோடு
பகிர்ந்து கொள்கின்றேன்
இல்லையேல்
சத்தமிட்டு அழுது தீர்க்கின்றேன்
மொத்தத்தில் நான் நானாக
இருக்கின்றேன்
நீங்களோ ஏன் தனிமையில்
இருக்கின்றாய் என்கிறீர்களே...
✍🏻ஷபானா ஆதம்லெப்பை
(ஓட்டமாவடி)
No comments