Breaking News

வாழ்க்கை யாருக்கும் அவ்வளவு எளிதில்..


 வாழ்க்கை யாருக்கும் அவ்வளவு எளிதில் எல்லாவற்றையும் அளித்து விடாது; பலவற்றை பறித்து பலவற்றை கற்றுக் கொடுத்து தான் பல தெளிவின்மை அளிக்கும்; ஆனால் யாருக்கும் தான் வாழ்க்கையில் கண்டு கொண்டவை; கண்டு கொள்ளாமல் இருப்பவை எனக் கூறிக் கொண்டே செல்லலாம்.


ஆனால், கண்டு கொண்டவை ஏன் கண்டு கொள்ளாமல் சென்றே இருக்கலாம் எனத் தோன்றும் எண்ணங்கள் எம்மை சித்தரித்து பல விளையாட்டை விளையாடிக் கொண்டு செல்கிறது. ஏன்? இறை விசுவாசம் வைத்தவன்; இறைவனிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான். தன் வாழ்நாள் முழுவதும் தன்னை நேசிக்கும் இதயங்களுக்கு உண்மையாக நேர்மையான இருக்க வேண்டும் என்பதை தவிர வேறு என்ன அற்ப ஆசை இருந்து விடப்போகின்றது.


எழுத்துகள் கூட என் எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி இடும் என‌ எண்ணவில்லை; எழுவதில் ஏற்படும் தடுமாற்றம் என் வாழ்க்கையின் திசைமாற்றி செல்ல வைக்கும் என எண்ணவில்லை; பல நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என் வாழ்க்கை. பலவற்றால் அடி மேல் அடி கொண்டும் இன்னும் எழுந்து செல்ல முடியாமல் தவிக்கின்றேன்‌. காலம் பதில் கூறும் என்பதற்கு முன் தானே என்னை பல சோதனைகளுக்கான பகடாய் மாற்றிக் கொள்வேன் என துளி கூட‌‌ எண்ணி இருக்க வில்லை.


என்னால் சற்று நிதானம் கொள்ளக் கூட‌ முடியாத மனம்; என்னுடைய இறுதிப் பயணம் வரை என்னை பெற்றவர்கள் என்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த பயணம் இவ் உலகில். தடுமாற்றம் பல கலந்த கலப்பற்ற மனம் பல தடைகளை கொண்டு கடக்கின்றது; இறுதிப் பயணம் நிம்மதியை அளிக்கும் என எண்ணி! வாழ்க்கை ஒரு போட்டிப் பரீட்சை என தெளிவு பெற்றேன். ஹலாலானவற்றிக்கான சோதனைகளைக் கொண்டு.🥹


Saheeka Pirthaws

No comments