Breaking News

தாங்க முடியா வலிகள் நெஞ்சை வருத்தி எடுக்கும் போது;


 தாங்க முடியா வலிகள் 

நெஞ்சை வருத்தி எடுக்கும் போது;

தனிமையில் உட்கார்ந்து

திருமறையைத் திறந்து 

ரப்போடு பேசிப் பாருங்கள்....


அவன் உங்கள் மேல் கொண்ட 

எல்லையில்லாக் காதலை

உங்களிடம் சொல்லி உங்களை

ஆறுதல் படுத்துவான்....


அவனது அன்பான

வார்த்தைகளைக் 

கொண்டு உங்களை 

ஆறுதல் படுத்துவான்....


உங்களை விட வலிகளைத் 

தாங்கிய இறைத் தூதர்களின்

தியாகக் கதைகளை

சொல்லி உங்களை 

ஆறுதல் படுத்துவான்....


உங்களது வலிகளுக்கு பின்னால்

அவனிடமுள்ள சுவனத்து

வெகுமதிகளைச் 

சொல்லி உங்களை

ஆறுதல் படுத்துவான்....


ஏனென்றால்;

உங்களை அவன் உங்கள்

தாயை விடவும் பல மடங்கு

அதிகமாக நேசிக்கின்றான்...

உங்கள் வலிகளைப் போக்கும்

ஆழமான வரிகள் அவனோடு

பேசும் நொடிகளைத் தாண்டி 

எதிலுமே கிடைப்பதில்லை....


 ✍️ பாத்திமா ஹகீமா அமீனுதீன்

ஓட்டமாவடி

No comments