வாழ்வில் ஒரு புறக்கணிப்பாவது வேண்டும்...
வாழ்வில்
ஒரு புறக்கணிப்பாவது வேண்டும்...
ஒரு துரோகமாவது வேண்டும்...
ஒரு ஏமாற்றமாவது வேண்டும்...
வாழவே முடியாது என்ற நிலைக்கு ஒரு முறையாவது தள்ளப் பட வேண்டும்...
கண்ணீரால் முகம் கழுவ வேண்டும்...
ஒரு முறையாவது யாரிடமும் சொல்ல முடியாமல் தனியறையில் மூச்சடக்கி மௌனித்து அழுதிருக்க வேண்டும்...
வேண்டாம் எனத் தூக்கி ஏறியப்பட வேண்டும்...
இவை எவையேனும் ஒருமுறையாவது நடக்கவில்லை என்றால் நாம் தகுதியற்றவர்கள் தான் மனிதன் என்ற போர்வைக்குள் இருக்க...
ஏன் தெரியுமா...
ஒரு புறக்கணிப்பு ஒரு மனிதனை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கொண்டு செல்லும்.
எந்த அளவிற்கென்றால் வேண்டாம் என்று எம்மை ஒதுக்கிய யாவும் வேண்டும் என்று ஏங்கும் அளவுக்கு...
✍🏻 சுமையா சத்தார்.
இது எனதான வரிகள்.
No comments