Breaking News

யாதும் நீயே ...


 

    அவனவள்   01   

 பொழுது சாயும் மாலைப் பொழுதில்  அந்தக் கல்லறையின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்திருந்தான்  ஆறடி ஆண் மகன் ஒருவன்.

         அவனது முகத்தில் என்றும் போல் இன்றும் இருக்கம் சூழ்ந்திருந்தது.

       அவன் சிரிக்கத் தெரியாதவன் அல்ல சிரிப்பை மறந்தவன்.

         அந்தக் கல்லறையை ரோஜா பூக்கள் அழங்கரித்திருக்க  மண்டியிட்டு அமர்ந்து இருந்தவனின் ஒவ்வொரு துளிக் கண்ணீரும் ரோஜா மேல பனித்துளியாகக் காணப்பட்டது. 

 " இங்க பாரு ஆதி நான் உன்னை விட்டுப் போனாலும் உன்னோட மூச்சு காத்துல கடைசி வரைக்கும் கலந்திருப்பன்"  என்ற தன்னவளின் வார்த்தைகளே அவனை இது வரைக்கும் உயிருடன் உயிரற்ற உடலாக வாழச் செய்கிறது.

     " அபி மா ஏன் டி என்ன விட்டு போன, நீ  இல்லாத உலகம் நரகமா இருக்குடி. அப்படி இருந்தும் உன் வார்த்தை தான் டி என் உயிர புடிச்சு வச்சிருக்கு " என்று மௌனமாக கண்ணீர் வடித்தவனின் அழுகை கதறலாக மாறிக் கொன்டிருந்தது.

           அவனது அழுகையை பார்க்க முடியாமல் அருகில் சென்ற ஜகன் அவனது தோளைத் தொட்டு" போதும் டா மச்சி  இன்னும் எவ்வளவு நாள் தான் அழுவ , தங்கச்சி ஆன்மா உன்னப் பார்த்து எவ்வளவு பாடுபடும் கொஞ்சம் யோசிடா " என்றதும் அவளது ஆன்மாவுக்கு  புரிந்ததோ என்னவோ  

அவ்விடத்தில் காற்று சுழன்றடித்தது .

       அபியைப் பற்றி பேசுகையில் சுவிட்ச் போட்டது போல் அழுகையை நிறுத்தியவன்  தனது கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு " என் அபி மா கஷ்டப் படக் கூடாது " என்று அவளது கல்லறையை மென்மையாக வருடியவன் விருட்டென எழுந்து சென்று விட்டான்.

      எவ்வாறு தான் வீடு செர்ந்தானோ என்னவோ 

தனது அறைக்கு சென்று  பாத்ரூமில் நுழைந்தவன் மனதின் பாரம் குறையும் வரை சவர் நீரில் நின்று கொண்டான். 

மனதின் பாரம் குறைவதற்கு பதிலாக அங்கிருந்த தன்னவளின் பொருட்களைப் பார்த்து மேலும் பாரம் ஏறிக் கொண்டது ‌.

        அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் உடை மாற்றி வந்தவனின் வயிறு சத்தம் எழுப்ப அதை உணர முடியாத படி மனதில் பாரம் பாராங்கல்லாய் அழுத்த

 கபோர்டை திறந்து தன்னவள் புடவையை எடுத்து வாசம் பிடித்தவன் அதை மார்போடு அணைத்தவாறு கட்டிலில் படுத்துக் கொண்டான்.

            விட்டத்தை பார்த்து படுத்திருந்தவனின் கடை விழியோரம் நீர் சிந்த அவனது நினைவுகளோ ஐந்து வருடங்கள் முன்னோக்கி சென்றது.



                   தொடரும்..



  

  ✍️  Muhsina saththar.

No comments