Breaking News

தேவதையின் விழிகள்..


விழிகள் 

        குருமூர்த்தி  சிந்துவின் புடவையில் கை வைத்தான்.

கை வைத்தது தான் தாமதம்  அடுத்த நொடி கையை உதறிக் கொண்டு  


"  ஆஆஆ "  என அலறித் துடித்தான்.


       ஆம்  , குருமூர்த்தியின் கையை மித்ரனின் துப்பாக்கி தோட்டா 

துளைத்திருந்தது.

 அதிலும் கோபம் குறையாத மித்ரன் தரையில் அமர்ந்து இருந்த


       குருமூர்த்தியை எட்டி உதைத்தான்.

          சிந்துவின் கட்டை அவிழ்த்து விட்டவன் அவளை தனது மடியில் தாங்கி

சிறிதளவு நீரை தெளித்து


" கண்மனி என்ன பாருடி " என்று புலம்பியவாறே அவளது கன்னம் தட்டினான் மித்ரன்.

     அதில் மயக்கம் கலைந்த சிந்துஜா மெதுவாக கண் திறக்க 

அவளது முகத்திற்கு மிக அருகில்  முகம் முழுக்க  பதட்டத்துடன்

இருந்த  மித்ரனை


" மித்ரா" என்று தாவி அனைத்துக் கொண்டாள் பெண்ணவள்.


         மித்ரனும் அவளை காற்றுப் புகக் கூட  இடமின்றி இறுக்கமாக அனைத்துக் கொண்டான்.


         நேரம் செல்லச் செல்ல அவனின் அனைப்பு இறுகிக் கொண்டு சென்றதே தவிர சற்றும் தளரவில்லை.


        சில நிமிடங்களில்

அவளை விடு வித்த மித்ரன் 


     சுமார் பண்ணி ரெண்டு மணி நேரம் அவளைக் கானாது தேடிய தவிப்பு அடங்கும் வரை 

  சிந்துவின் முகம் முழுக்க முத்தமிட்டான் அந்தக் காதல் காவலன்.

    சிந்துவும்  தன்னவன் தவிப்பு உணர்ந்து  அவனுக்குள் வாகாகப் புதைந்து கொன்டாள்.

சிந்துஜாவை சென்னை சிட்டி முழுக்க தேடியும் அவள் கிடைக்க வில்லை என்றதும்

             மித்ரனின் சிந்தனையில்

        அவளது  விரலில் தான் அளித்த ஜி .பி. எஸ் கருவி பொருத்தப் பட்ட  மோதிரம் இருப்பது


    நியாபகம் வர 

அதை வைத்து ட்ராக் செய்தான் மித்ரன்.


     சில நிமிடங்களில் சிந்து சிட்டிக்கு சற்றுத் தொலைவில்  உள்ள செங்கல் சூலையில் 

அவள் இருப்பதாக தெரிய வர


      மின்னலுக்கு இனையான வேகத்தில்  அவளைத் தேடி சென்றுவிட்டான்.


         அங்கு சென்று பார்க்க  இருபதுக்கு அதிகமான  குடோன்கள் இருக்கவே ஒவ்வன்றாக திறந்து பார்த்தான்.


       இறுதியாக இருந்த குடோனைத் திறக்கவே  


         அவன் கண்களில் பட்டது  

தன்னவள் புடவையில் கை வைத்திருக்கும் குருமூர்த்தி தான் 


       கோபம் தலைக்கேற அவன் தலைக்கு குறி வைத்த மித்ரன்


" உன்னை ஈஸியாக சாவ விடமாட்டேன்" என்று அவன் கையில் சுட்டான்.


         சற்று நேரத்தில் இயல்புக்கு திரும்பிய மித்ரன்  


தன் மார்போடு புதைந்திருந்த சிந்துவை 


      கைப் பிடித்து குருமூர்த்தி அருகில் அழைத்து  சென்றவன் 

" உனக்கு அடிச்ச மாதிரி திருப்பி அடி" என்றான்.


       குருமூர்த்தியோ" ஒரு பொட்டச்சி கைல நான் அடி வாங்கனுமா"என்று


     "டேய் எங்கடா போய்டீங்க " என்று தனது அடியாட்களை அழைக்க 


      அவர்களோ மித்ரனின்  அடியில்  முகம் முழுக்க இரத்தத்துடன் குடேனுக்கு வெளியில் விழுந்து கிடந்தனர்.

             

   மித்ரன் திரும்பவும் "அடி" என்று கூற


சிந்து: " என்னால் முடியாது பயமா இருக்கு"


 " ஏன் டி அன்னைக்கு தப்பே பன்னாதவனுக்கு நடு ரோட்டில் வச்சி மூக்க ஒடச்ச , இப்ப என்ன அடி" என்று மித்ரன் அழுத்தமாக கூற


       சிந்துவோ தன் கையை முறுக்கி அவனது மூக்கிலே ஒரு குத்து விட


        குருமூர்த்தியோ அவ்விடத்திலேயே மயங்கிச் சரிந்தான்.


     அதை புன்முறுவலுடன் திருப்தியாக பார்த்த மித்ரன்


" போலீஸ் காரன் பொண்டாட்டி என்றத நிரூபிச்சிட்ட  கண்மனி "  என்று


      சிந்துவை இடுப்போடு சேர்த்து அனைத்துக் கொண்டு  அவள் மூக்கோடு மூக்கை உரசிக் கொண்டான்.


              சில மணி நேரங்களில் கண் விழித்த குருமூர்த்தி 

அவன் அருகில் ஒரு பினம் படுத்திருப்பதைப் பார்த்து பயந்து 


      கைகளால் உவவிப் பார்த்தவர் தான் ஒரு பெட்டியில் அடைபட்டுக் கிடப்பதை உணர்ந்து


"  காப்பாத்துங்க, பிளிஸ் ஹெல்ப் "என்று  கத்தியவரின் குரல் பூமியை விட்டு வெளியே கேட்க வில்லை. 


      ஆம், மித்ரன் குருமூர்த்தியை  சவப் பெட்டியில் அடைத்து மண்ணில் புதைத்தவன்


        தன சேகரை தீயிட்டு கொளுத்தி சாம்பலாக்கி இருந்தான்.


        அடுத்த நாள் பிரஸ் ரிப்போர்ட் முன்னால் நின்றிருந்தான் மித்ரன்.


" சார் மினிஸ்டர் தலை மறைவு என்பது உண்மையா"


" தன சேகரை கோட்ல ஏன் ஒப்படைக்கல" 


" இத்தனையும் பொண்ணுங்கள எய்ம் பன்னி நடந்திருக்கு, இதைப் பற்றி என்ன நினைக்குறீங்க சார்"


" பெண்களைப் பாதுகாப்பு பற்றி என்ன சார் நினைக்குறீங்க"

என்று ஒவ்வொரு நியுஸ் சேனலில் இருந்து கேள்வி எழுப்ப


மித்ரன் : " குருமூர்த்தி சட்டத்துக்கு பயந்து தலை மறைவாயிட்டாரு. தன சேகர் கோட்டுக்கு போற வழில தப்பி ஓடிட்டார். அவங்கள கூடிய சீக்கிரமே எங்க டிப்பாட் மண்ட் தேடி கண்டுபிடிச்சுரும்.


          இதற்கு காரணம் பொண்ணுங்க கற்ப அவங்க ஒரு பொருளா பார்த்தது தான்.


         இந்த உலகத்துல ஒரு நிமிடத்துக்கு நூற்றுக் கணக்கான பெண்கள் வன் கொடுமைக்கு உட்படுத்தப் படறாங்க


         கவர்மென்ட் எவ்வளவு தான்  மகளீர் சங்கங்கள்கள உருவாக்கினாலும்

ஆண்கள் அவள போதைப் பொருளா பார்க்காம தெய்வங்களா மதிக்குற வரைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது" என்று


கம்பீரமாக கூறிய மித்ரன்   ஸ்டேஷனில் நுழைந்து கொண்டான்.


இரண்டு வருடங்களுக்கு பிறகு


          அந்தத் திருமண மண்டபமே உறவினர்களால் நிரம்பி வழிந்தது .


         மண்டப வாசலில் தியா வெட்ஸ் அஜய் என்று எழுதப் பட்டிருந்தது.


         

          ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க 

மங்கல வாத்தியங்கள் முழங்க பெரியவர்கள் அர்ச்சதை தூவ அஜய்


தியாவின் கழுத்தில் தாலி அனிவித்து

அவளைத் தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான்.


       திருமண சடங்குகளும் ஒவ்வன்றாக நடைபெற்று முடிந்தது.


          இங்கு சிந்துவோ மித்ரனின் கண்களில் சிக்காமல் போக்குக் காட்டிக் கொண்டு இருந்தாள்.


" எப்படியும் சிக்காமலா போய்டுவ" என்று நினைத்து சிரித்துக் கொண்டான் மித்ரன்.

            இரவு எட்டு மணியை கடக்க


      தியாவை ஆழங்காரம்  செய்து

அவள் கையில் பால் சொம்பை கொடுத்து

அவளை அஜயின் அறை வாசலில் விட்ட


        சிந்து  தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


    கட்டிலில் அமர்ந்து இருந்த மித்ரன் " என்ன மேடம் கண்டுக்காம போறீங்க" என்று அவளை வம்பிழுக்க


        கட்டிலில் அவனுக்கு பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த  தனது ஒரு வயது மகள் மீனாவை காட்டிய சிந்து 


   " யோவ் அந்தா இருக்காலே ஒன் பொண்ணு  அவக் கூடவே இருந்துக்கோ,

இப்பதான் நாங்க சார் கண்ணுக்குத் தெரிதமாக்கும்"என்று

நொடித்துக் கொள்ள 


         அவள் அருகில் சென்ற மித்ரன்  அவள் இடுப்பை சுற்றி அனைத்துக் கொண்டு 


"  அடியேய் ராட்ஷஷி மீனுக் குட்டி மேல பொறாமை படாதடி" என்று


            சிந்துவின் கூர் நாசியைக் கடிக்க 


     கூச்சத்தில் அவன் மார்பிலே சாய்ந்து கொண்டாள் பெண்ணவள்.


     தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்


நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நினைத்தாள் என் முகவரி மாற்றி விட்டாள்


ஒரு  வன்னத்துப் பூச்சி   என் வழி தேடி வந்தது


அதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு உள்ளது நெஞ்சுக்குள்ளே விரல் வைத்தேன்


தனித் தீவில் கடை வைத்தேன் மணல் வீடு கட்டி வைத்தேன்


தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்  


                                                         முற்றும்.



✍️    Muhsina saththar.

    நெல்லியகம பலாகல.

No comments