விண்வெளி வீரர்களின் பயணங்கள் பற்றி என்ன அறிந்துள்ளீர்களா?
இவர்களும் எட்டு மணி துாங்குகிறார்கள் என்பது உண்மைதானா?
விண்வெளி வீரர்களின் தனிமைப் பயணம் விசித்திரமானது. பல சுவாரஸ்ஸியங்கள் நிறைந்தது. பூமிக்கும் நிலவுக்கும் இடையே 2,38,857 மைல் துாரம் இரு்ககின்றது. 69 மணி 8 நிமிடங்களில் அப்பொலோ விண்கலம்8, நிலவினைத் தொட்டது. அப்பொலோ11, 3 நாட்கள் 3 மணி 41 நிமிடங்களில் நிலவில் முதல் மனிதனைச் சேர்த்தது. செவ்வாய் கிரகத்திற்கு சென்று வர 9 மாதங்கள் எடுத்தன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ராக்கெட்டில் செல்லும் விண்வெளி வீரர்களின் தனிமைதான்!
பல் துலக்குகிற வேளை இது…..
இந்தப் பயணியின் தனிமை எப்படி கழிகின்றது?
தினமும் உட்பயிற்சி செய்ய வேண்டியது கட்டாயம்.
பற்பசை மூலம் தினமும் பல்துலக்க வேண்டும்.
தங்களைச் சுற்றியுள்ள அறைகளின் சுவர்கள், தரை போன்றவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.( நான்கு வித்தியாசமான குப்பைத் தொட்டிகளில்தான் அந்தந்த கழிவுகளைப் போடவேண்டும்.)
ஐஸ்கிரீம் சாப்பிட அருயைான இடமாம்…
சாப்பிடும் தன்மையிலுள்ள பழங்களைச் சாப்பிடலாம். அல்லது நீர் கலந்து சாப்பிடக் கூடிய உணவுகளும் உண்டு.
உப்பும், பெப்பரும் திரவ நிலையில் கிடைக்கின்றன.
சாப்பிடும் அளவும் உண்டு. தினசரி மூன்று வேளைகளுக்கு 1900 கலோரி உணவிலிருந்து3200 கலோரி வரை சாப்பிடுகிறார்கள்.
தங்கள் உடம்பில், புவிஈர்ப்பு இல்லாத நிலையில், ஏற்படும் மாறுதல்களை விஞ்ஞான முறையில் ஆய்வு செய்ய வேண்டியதும் இவர்கள் பணி.
பிட்ஸா சாப்பிடுவோமா என்று கேட்கிறார்கள்..
45 நிமிடங்களுக்கொருமுறை சூரியோதயத்தையும், அஸ்தமனத்தையும் காணமுடிவதோடு, விண்வெளிக் கப்பல்களிலுள்ள பல ஜன்னல்கள் ஊடாக “பூமி சுழல்வதை” பார்த்துக் கொண்டிருப்பது இவர்கள் பொழுதுபோக்கு
விரும்பும் நேரங்களில் உடற்பயிற்சி செய்ய ஒரு டிரெட்மில் இருக்கின்றது.
உடற் பயிற்சி வேளை….
மிகக் குறைவான புவிஈர்ப்பு திசையின் காரணமாக, இவர்கள் எந்த பொஸிஷனிலும் துாங்கலாம்.
ஹோல்டால் மாதிரி ஒரு பெரிய பையில் தினசரி 8 மணி நேரம் இவர்கள் துாங்குவது என்பது உண்மைதான்.(துாக்கத்தின் நடுவே டாய்லட் சென்று வரவும் முடியும்)
கனவுகள் காண்பதாகவும் சில விண்வெளிவீரர்கள் சொல்லியுள்ளார்கள். குறட்டை விட்டுத் துாங்கியவர்களும் உண்டு.
நாசாவில் விண்வெளி வீரர்களுக்கு 16 வகைப் பயிற்சிகள், 2 வருடங்களுக்கு ஏன் வழங்கப்படுகின்றன என்பது இப்பொழுதுதான் புரிகின்றது
No comments