பேரன்பின் வடிவம்..
களைப்போடு கரை காண
வாசல் தேடிய பயணம்
என் வருகைக்காய்
முதலில் தரித்தவன்
அவன்....
அகல செவிகளில்
என் அடியோசை கேட்டால்
அவல உறக்கம் ஏதுமின்றி
என்னை
அருகில் ஓடி
அணைத்துக் கொள்வான்....
பூசி விட்ட இருளையும்....
துளிறிவிட்ட மரப் பூச்சையும்
தடவி விட்ட திண்மத்தில்
வானவில்லின் எழிலும்
தோற்றுப் போனதே
அவனது ஒருமித்த
ஓர் அழகில்....
வஞ்ச மீன் அஞ்சியதும்
இடரினில் தலைகுனிந்து
தடம் பதித்த தருணம்
தயக்கம் திரையின்றி
தன் மடி வந்து
தலை சாய்ப்பான்....
தனிமை தேடிய நொடியில்
மியாவ்
என்ற ஓசையில்
அவன் ஒரு அன்னை மடி....
சோம்பல் முறிக்க சுற்றியும்
உச்சம் தேடினால்
அவன் தான்
என் சேட்டையின் சரிதம்....
கூச்சம் கிசுகிசு என்று
கொஞ்சிட
அவனது மெத்தை மெட்டி
என் கரம் தடவிச் செல்லவே மேனி ஏதோ
மெய் சிலிர்த்தே போகும்.....
விட்டு செல்லும்
விருந்தினர் நடுவே
என்னுள் இன்றும்
விலகா வழி வாழும் நீயே என்றும்
என் நூலில்
இன்னொரு பாகம்...!
இப்படிக்கு
அவள்
காவிய கண்ணகி
No comments