Breaking News

அப்பா இல்லாத வாழ்வு எப்படி இருக்கும்?

 


ஒவ்வொரு வீட்டில் உள்ள வாசப்படி தாய் என்றால், அந்த வீட்டின் வாச கதவு தான் தந்தை! 


ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பு வாச கதவு, அதேபோல் தந்தையை போல சிறந்த பாதுகாப்பு வேறு எந்த உறவுகளும் கிடையாது!


தாயிக்கு பின் தாரம், ஆனால் தந்தைக்கு பின் யாருமில்லை! 


தந்தை ஸ்தானத்தை எந்த உறவும் ஈடு செய்ய முடியாது!


ஒரு வீட்டில் அப்பா இல்லை என்றால், உறவுகளின் அதிகாரம் தலை தூக்கும். அப்பா இல்லை என்றால் தான் உறவுகளின் உண்மை முகங்கள் வெளிப்படுகிறது!


அப்பா இல்லை என்றால், தெரிந்தவன் தெரியாதவன் கூட ஏமாற்றுவார்கள். அதுவும் மாமியார் வீட்டில் அப்பா இல்லை என்றால் நன்றாகவே ஏமாற்றுவார்கள். பெரும்பாலும் அப்பா இல்லாத வீட்டில் அம்மாவுக்கு மரியாதையும் இல்லை! 

மதிப்பும் இல்லை! 


கணவர் இல்லாத மனைவிமார்களை இந்த சமூக உறவுகளால் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.


மாமனார் இல்லாத வீட்டில், மருமகளும் சரி, மருமகள் வீட்டாரும் சரி, மாமியாரை வெச்சி செய்வார்கள். அதுவும் மாமியாருக்கு கணவன் மட்டுமே ஒரே பிள்ளை என்றால், இன்னும் சுலபமாக மாமியாரை பிரித்து தனிக்குடித்தனம் வைத்தால் தான் வாழ்வேன் என்று சொல்லும் மருமகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் மருமகள் வீட்டார்கள். ஒரு வீட்டில் அப்பா இல்லை என்றால் குடும்பத்தில் சிறிய பிரச்சினைகளுக்கு கூட மூன்றாம் நபர் தலையீடு செய்து பிரச்சினையை பெரிது படுத்தி அழகான குடும்பத்தை சிதைக்கவும் செய்கிறார்கள். இதனால் 


பெரும்பாலும் அப்பா இல்லாதவர்கள் சிறு தவறுகள் செய்தால் கூட பெரிது படுத்தி சிறுமை படுத்தும் உறவுகள் அதிகம். அப்பா இல்லாதவர்கள் தவறு செய்தால், பெரிய பாவம் செய்த மாதிரி பேசுவார்கள் உறவுக்காரர்கள். அதேபோல் பிறர் தவறை கூட கேள்வி கேட்க முடியாது.


ஆக மொத்தம் அப்பா இருக்கும் போது அவரது அருமை தெரியாது. அப்பா இல்லாத போதுதான் உலகத்தின் சுயரூபம் தெரிகிறது!! அப்பா இருக்கும் போது அனைத்து கஷ்டங்களை அவரே சுமக்கிறார். அதனால் தான் நமக்கு எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ்கிறோம்.


தான் பெற்ற கஷ்டங்களை தனது பிள்ளைகளுக்கு காட்டாமல், பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய… தனது சுகங்களை எல்லாம் தியாகம் செய்து தனது பிள்ளைகளை இமை போல் காக்கும் ஒவ்வொரு தகப்பனும் நம் குலச்சாமி தான்!!


தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும், தந்தையின் அன்பில்…


தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!!!

No comments