Breaking News

தேவதையின் விழிகள் 26....

  


விழிகள் 


           அந்த அறையில் ஒரு பக்கச் சுவர் சற்று  வித்தியாசமாக தெரியவும்  


     அதன் அருகில் சென்ற சிந்து " ஏய்"  என்ற அதிகாரக் குரலில் திரும்பிப் பார்த்தவள்


  கைகளை கதவில் குற்றிய படி  அவளையே முறைத்துக் கொண்டிருந்த மித்ரனை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.


    அவளருகில் சென்ற மித்ரன் அவள் முகத்தின் முன் சொடக்கிட்டு " என்னடி பன்னிட்டு இருந்த " என்று கேட்க


   மலங்க மலங்க முழித்த சிந்து "  அது அது   ஒன்னுமில்லையே"


" ஒன்னுமில்லாம தான பீரோல இருந்த துணிமணிகளை  இழுத்து போட்றுக்க " 


       அவனது பார்வையில் எச்சிலைக் கூட்டி விழுங்கிய சிந்து   " ரூம் ஒரே டஸ்ட்டா இருந்திச்சா அதான் கிளீன் பன்னலாமே"


மித்ரன்: " சரி கிளீன் பன்னிட்டு போ" 

என்றதும்


 " இவன் என்ன வீட்லயும் போலீஸா இருக்கான் " என்று முணுமுணுத்தாலும்  பம்பரமாக சுழன்றபடி    பீரோவில் துணிகளை மடித்து வைத்த 


 சிந்துஜா அவனது கைகளில் சிக்காமல்  வெளியே ஓடினாள்.


         சிந்து ஒவ்வொரு லாக்கராக  திறக்கும் போது மித்ரன்  வந்து விட்டான்.


       ஆனால் அவளது ஒவ்வொரு செயலும் சுவாரஸ்யத்தை கூட்ட 

அமைதியாக அவளை பார்த்த படி நின்றான்.


        சற்று நேரத்தில் அவள்   ரகசிய அறைக் கதவை நோக்கி செல்கையில் 


     இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் நிலமை விபரீதமாகலாம் என்று அறிந்த மித்ரன் 


" ஏய்" என்று அதட்டல் குரலில் அழைத்திருந்தான்.


         

             சாந்தி தங்கியிருந்த ஆஷிரம நிர்வாகி  தனசேகர்  பற்றிய பைல எடுத்த மித்ரன்

ஸ்டேஷன் நோக்கி கிளம்பி இருந்தான்.



ஸ்டேஷனில்.....


            தனசேகர்  ஜட்டியோடு அமர்ந்திருக்க


        அவனை அடித்துக் களைத்துப் போன ருத்ரன்  மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி  " சொல்லித் தொலையேன்டா "என்று கத்த


        தனசேகரோ " நீ என்ன பன்னாலும்   உண்மைய சொல்ல முடியாது" என்று  அமைதியாக இருந்தான்.


        இவன் வாயிலிருந்து உண்மையை வெளியேடுக்க என்றே மித்ரனின் ஜீப் சத்தம் ஸ்டேஷன் வாசலில் கேட்டது.


       மித்ரனை பற்றி அறிந்திருந்த தன சேகருக்கு   அவனின் வருகை நெஞ்சில் நீரை வற்றச் செய்தாலும் திமிராகவே அமர்ந்திருந்தான்.


          " என்னடா மச்சான் களைச்சி போய்ட போல " என்று கேட்ட படி வந்த மித்ரன்  தனசேகருக்கு முன்னால் சேரை தூக்கிப் போட்டு அமர்ந்தான்.


          ருத்ரன்: " வாயே திறக்க மாட்டான் டா இந்த நாய் "


    " இவனேல்லாம் அடிச்சி எதுக்கு ஏனர்ஜிய வேஸ்ட் பண்ணுற " என்ற மித்ரன்


தனசேகரிடம் " ம்ம் சொல்லு " என்று அமைதியாக கேட்க


      ருத்ரனோ" இவன் இப்படி அமைதியாக இருக்குற ரகம் இல்லையே ஏதோ பிளான் பண்ணிக்கிட்டான் "என்று நினைத்து அவன் பக்கத்திலேயே சேரை போட்டு அமர்ந்தான்.


           தனசேகர் அப்போதும் மௌனமாக இருக்க


" பினிஸ்ட்" என்று கைகளை தூக்கி எழுந்த மித்ரன்


      அவனருகில் சென்று தேனை அவன் உடல் முழுக்க ஊற்றி


  போட்டலில் அடைத்து வைத்திருந்த சில கட்டெறும்பும்புகளை அவன் மீது போட்டான்.


          தேன் வாசத்தில் கட்டெறும்புகள் நொடிக்கு நொடி அதிகரிக்க 


        தனசேகரோ கட்டெறும்புகளின் தாக்குதல் தாங்க முடியாமல்   " உண்மைய சொல்லுறேன்"என்று கத்தினான்.


மித்ரன் ருத்ரனுக்கு கண்ணை காட்ட


    அவன் போனில் வீடியோ எடுக்க தயாரானான்.


 தனசேகர் : "  ஆசிரமத்தில் இருக்குற பொண்ணுங்கள தான்  இந்த மாதிரி தொழிலுக்கு பயன் படுத்துவோம்.


மித்ரன்:" புரியலை"


" ஆசிரமத்தில் இருக்குற வயசு பொண்ணுங்கள பாடி செக்கப் என்று கூட்டி போவாங்க  


அதுல ஹெல்த்தியா இருக்குற பொண்ணுங்க கருப்பைல குளோனிங் மூலமாக கரு உருவாக்கி  அவங்க மூலமாக வர்ர குழந்தைய பாகிஸ்தான் தீவிர வாத இயக்கத் திற்கு நாடு கடத்துவாங்க .


   ஆசிரமத்தில் வளர்ற பொண்ணுங்களுக்கு இரக்க குணம் ஜாஸ்தி. அதனால் அவங்க கரு கலைக்க மாட்டாங்க.  சிலர் கலைக்க ட்ரை பன்னா கொன்ருவாங்க "என்று கட்டெறும்பு ஊர்வலத்தில் கத்தியடியே கூறி முடித்தான்.



         தனசேகர் உடம்பில் ஒரு வாளி குளிர்ந்த நீரை ஊற்றிய மித்ரன்


      அவனின் கதறல் மட்டுப் பட்டதும்


" யார் இதுல மெய்ன் "என்று மித்ரன் கேட்க


" தெரியாது. அவங்க ஒவ்வொரு பெண்ணுக்கும் லக்ச கணக்குல பணத்தை அக்கவுண்ட் ல போடுவாங்க "

 

       என்றதும் " பொண்ணுங்க உங்களுக்கு கிள்ளு கீரையா.அவங்க உலகத்தை காக்குற தெய்வம் டா " என்று கத்திய மித்ரன்


தனது கோபம் குறையும் மட்டும் அவனது குமட்டில் குற்றினான்.


       தன சேகர் வலியினால் மயங்கிச் சரிந்தும் அவனது கோபம் குறையாமல் அடிக்க


         அவனது கைகளை பற்றிய ருத்ரன் " டேய் போதும் டா செத்துடப் போறான்." என்றான்.


          " இவன கோட்ல ஒப்படைக்க முதல் நான் இவன் கதைய முடிச்சி காட்டுறேன்" என்று ஆவேசமாக கூறிய மித்ரன்


         கமிஷனர்கு வீடியோ ஆதாரத்தை  மெயில் பண்ணிய மித்ரன்


      ஆசிரமத்தை சீல் வைப்பதற்கு அனுமதி பெற்றுக் கிளம்பினான்.


          ஆசிரமத்தில் உள்ளவர்களை பாதுகாப்பான லேடிஸ் ஹாஸ்டலில் தங்க வைத்து


    ஆசிரமத்துக்கு சீல் வைத்து என்று வேலைகளை முடித்து கொண்டு கிளம்ப  இரவு பத்து மணியை தாண்டி இருந்தது.



         இங்கு அவனது அறையில் உள்ள ரகசிய அறைக்குள் சிந்து மயங்கிக் கிடந்தாள்.


             விழிக்கும்....



✍️   Muhsina saththar.

கனவுகளின் இளவரசி RS musha

நெல்லியகம பலாகல

No comments