Breaking News

தேவதையின் விழிகள் 25...

 



விழிகள்   


         மித்ரனின் நடவடிக்கைகளால் சிந்துஜாவின் சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்தது.


      மித்ரன் வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த கணமே அவர்களது அறையை சோதனை இட ஆரம்பித்தாள்.



      நேராக வைத்திய சாலைக்குச் சென்ற மித்ரன்  டாக்டர் ஷீலாவை சந்தித்தான்


" சொல்லுங்க டாக்டர் சாந்தியோட போஸ்ட் மார்டன் ரிப்போர்ட் என்னாச்சு"


ஷீலா " அது பத்தி எனக்கு தெரியாது"


    "அப்போ உங்களுக்கு தெரியாது" என்று கேட்ட மித்ரன்  அவர் முன் ஒரு வீடியோவை ப்ளே பன்ன  அதைப் பார்த்து பயந்த ஷீலா 


"நீங்க யாரு"


மித்ரன் " போலீஸ் மா"


ஷீலா " அது வெளி உலகுக்கு என்று தோனுது


மித்ரன்" ஏன் அப்படி தோனுது"


ஷீலா வீடியோவை சுட்டி காட்டி " இது எப்படி உங்க கைல "


மித்ரன்"  சரி தான் டாக்டர் மூலையாச்சே. சரி விச்யத்துக்கு வா " என்று அதட்ட


" சாந்தியோட கழுத்துல ஒரு ஆணோட விரல் ரேகை பதிஞ்சு இருக்கு. அப்புறம் அவ கண்ணிப் பொண்ணு தான் .

வயித்துல இருக்குற கரு குளோனிங் மூலமாக உருவாயிருக்கு " என்று  ஷீலா ஒப்பு விக்க


   பக்கத்தில் இருந்த சேரை ஒற்றைக் கையால் சுழற்றி அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த மித்ரன் 


" இவ்வளவு தெரிஞ்சி இருந்தா  சாந்தி கருப்பைல செலுத்தப் பட்டது யாரோட செல்"


 " எனக்கு தெரியாது"


 "தெரியாது " என்று மித்ரன் போனை மேலும் கீழும் ஆட்ட 


" சரி  நான் ஒரு டாக்டர் நம்பர் தாரேன்  அவங்களுக்கு தான் தெரியும்" என்று ஒரு சீட்டில் நம்பரை எழுதி கொடுக்க


   "  ஸீயூ லேடர்" என்று புரியாத புன்னகையை சிந்தியவன் அங்கிருந்து வெளியேற   ஷீலா தலையை பிடித்தவாறு அமர்ந்து விட்டாள்



மினிஸ்டர் வீட்டில்....


      குருமூர்த்தி " என்னயா பன்னிகிட்டு இருக்கீங்க. என் தம்பி காணம போய் 36 மணி நேரம் ஆவது " என்று கமிஷனரிடம் கத்திக் கொண்டிருந்தார் .


கமிஷனர் " இத டீல் பன்ன  மித்ரன் தான் கரேக்ட், அவன் தான் ஏற்கனவே காணாமல் போன  அடியாட்கள் கேஸையும் க்ளோஸ் பன்னான்"என்று கூற 


     " அவன் கிட்ட குடுத்தா என் தொழில் சாம்ராஜ்யத்தையே அழிச்சுருவான்.  ஏற்கனவே  சாந்தி பொண்ணு கேஸக்கூட இன்னும் தொண்டுறான் "

என்று நினைத்த குருமூர்த்தி அவன் வேண்டாம் என்று கூறி  விட்டு அமுக்ஷமைதியாகிக் கொண்டார்.

           அரையை சோதனை இட்ட அபிக்கு   பீரேவின் அடியில்  சிலரது ப்ளக் அன்ட் வைட் புகைப்படங்கள் கிடைக்க  அதில் அவர்களது முகம் சிவப்பு நிறத்தால் வட்டமிடப் பட்டிருந்தது.


      " ஆஹா இன்னும் தேடுனா ஏதாச்சும் கிடைக்கும்" என்று   நினைத்த சிந்து  பீரோவில் ஒவ்வொரு லாகராக இழுக்க அதில் இரண்டு  பாஸ்வேர்டு கேட்டது.


         ஏனையவற்றை திறக்க சில பைல்களும்  தீர்ந்து போன திரவக் குப்பிகளும் கண்ணில் பட்டது.


           ரூமை சுற்றிப் பார்த்த சிந்துவின் 

கண்களில்  சுவர் தான் ஆனால் அவ்விடம் சற்று வித்தியாசமாக இருக்கவும். 


   அதை தொட்டுப் பார்க்க முயற்சி செய்ய 


" ஏய்" என்ற அதிகாரக் குரலில்  திரும்பிப் பார்த்த சிந்து விழி விரிய அதிர்ச்சியில் 

இருந்தாள்




✍️  Muhsina saththar

 கனவுகளின் இளவரசி.      Rs musha

நெல்லியகம பலாகல

No comments