Breaking News

தேவதையின் விழிகள் 24...



விழிகள் 


            முகமூடியை கலட்டி விட்டு பெரிதாய் சிரித்த மித்ரனை பார்த்து இருவரும் அதிர்ச்சியில் உறைந்து இருந்தனர்.

          அதிர்ச்சியில் இருந்த இருவர் முன்பும் சொடக்கிட்ட
மித்ரன் " என்ன யமன நேர்ல பார்க்குற போல பீல் ஆவுதா"

ரவி : " அது......அது......நீ......நீ.

மித்ரன்: "  ச்சச்ச பேச்சும் போச்சா என்று உச்சுக் கொட்டினான்.

ரவி : " இல்லை நீ

மித்ரன்: " இன்னும் புரியல, அவனும் நானே இவனும் நானே"

   ரவி: "  அத்தன பேரையும் கொண்டது"

" உன்னையும் அங்க தான் அனுப்பப் போறேன் போய் பார்த்துக்க" என்று  குறூரமாய் சிரித்த மித்ரன்  ஒரு திரவத்தை எடுத்து அவனை நோக்கி எறிந்தான்.

         அவ்விடத்திலேயே ரவியின் உடல் எறிந்து சாம்பலாக மாறியது

     ரவியின் நிலையை பார்த்த அப் புதியவன் 
" நான் யார் தெரியுமா மினிஸ்டர் தம்பி " என்று உயிர் பயத்தில் உலர ஆரம்பித்தான்.

      மித்ரன்: " நானா உன்னை ஏதும் பன்ன மாட்டேன்  நீயா தூக்கு மாட்டிப்ப "

புதியவன் : " இல்லை என்ன ஒன்னும் பன்னிடாத "

மித்ரன்: " அப்படிங்குற .சரி உனக்கு ஒரு சான்ஸ் தாரேன் .  நான் கேக்குற கேள்லவிக்கு பட்டுனு பதில் சொல்லிட்டு போயிரு 
              
" மிஸஸ் குருமூர்த்திய ஏ கொன்ன"

 புதியவன் " இல்லை அவங்க சாகல . கோவில்ல பார்த்தேன் ."

 "அன்னைக்கு கோவில்ல ஓ பொண்டாட்டியா கொள்ளத் தான் வந்தேன். 

அவங்கள கண்ட அதிர்ச்சியில் விலகி போய்ட்டன் "

     ( ஆம் அன்று திருமண நாளன்று சிந்துவை பார்த்திருந்த இரு ஜோடிக் கண்களுல் ஒரு ஜோடிக் கண்கள் மித்ரனுடையது என்றால் மறுஜோடிக் கண்கள் இவனுடையது)

 " சரி நீ போ " என்ற மித்ரன் " இல்லை நானே உன்னை அனுப்பி வைக்கிறன் என்று அவனது கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்க  அவனது உயிர் அவ்விடமே பிரிந்து சென்றது.

         " டேய் குருமூர்த்தி இப்ப நீ மட்டும் தான் டா  சீக்கிரமே வர்ரேன் டா" என்று ஆவேசமாகக் கத்தினான் மித்ரன்.

  
மித்ரன் வீட்டில்.....

         நேரம் மதியத்தை தான்டி சென்று  கொண்டிருக்க

     ராஜி டீ.வி சீரியலில் மூழ்கி இருக்க ஜாகிங் உடையில் உள்ளே நுழைந்தான் மித்ரன்

      ராஜி " என்ன கண்ணா இன்னைக்கு ரொம்ப லேட் "

     மித்ரன்" ஜாகிங் போய் ரொம்ப நாளாச்சா அதான் ராஜிம்மா பார்க் ல இருந்துட்டு வந்தேன்."


ராஜி : " லன்ஸ் எடுத்து வக்கிறேன் "

மித்ரன்: "  இல்லை வேணாமே ராஜிம்மா .
ஸ்டேஷன்ல பார்த்துக்கறேன் என்றவாறே ரூமில் நுழைந்து கொண்டான்.

          அறைக்குள் நுழைந்த மித்ரன் கட்டிலில் புத்தகத்தை கையில் வைத்து அமர்திருந்த சிந்துவை பார்த்த மித்ரன் அதிர்ச்சி அடைந்தான்.

சிந்து " ஜாகிங் போறது இவ்வளவு நேரமா"

பேச்சை மாற்றும் பொருட்டு மித்ரன் " நீ காலேஜ் போகல "

  சிந்து: " லெக்சரர் சீக்கிரம் முடிஞ்சு அதான் வந்துட்டேன். சரி நீங்க சொல்லுங்க"

" ஐயோ இவ இப்போதைக்கு விட மாட்டா போல " என்று நினைத்த மித்ரன்

அவள் ஏதோ பேச வரவும்  அவள் இதழ்களில் தனது இதழைப் பதித்து அவள் பேச்சை தடை செய்தவன் பாத்ரூமிள் நுழைந்து கொண்டான்.

       சிறிது நேரத்தில் மித்ரன் காகி உடையில் வெளியே வர அவனைப் பிடித்துக் கொண்ட சிந்து மீண்டும் அதே கேள்வியை கேக்க

     அவளது இதழ்களில் முத்தமிட்டு  அவள் பேச்சை நிறுத்தியவன் 

  விருட்டென அறையில் இருந்து வெளியே சென்றான்.


        மித்ரனின் நடவடிக்கைகளால் சிந்துஜாவின் சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்தது.

                
                  விழிக்கும்.....




✍️  Muhsina saththar.

கனவுகளின் இளவரசி RS musha

நெல்லியகம பலாகல.

No comments